'

பாடசாலை சுற்றறிக்கைகள் திருத்தம் தொடர்பில் ஆலோசனை கோரல்
பாடசாலை முறைமையிலுள்ள பின்வரும் சுற்றறிக்கைகளில் திருத்தங்களை கொண்டு வருவதற்கு கல்வி அமைச்சு தீர்மானத்துள்ளது. மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேற்படி விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருத்தங்களுக்கு உள்ளாகவுள்ள சுற்றறிக்கைகள் கீழே தரப்பட்டுள்ளன.

1. பழைய மாணவர் சங்கம் (1961/27 - 1960.11.20)

2. பழைய மாணவர் சங்கம் மற்றும் ஏனைய சங்கங்களின் செயற்பாடுகள் (2008/41 - 2008.11.03)

03. மாணவர் விடுதி முகாமைத்துவ சுற்றறிக்கை கடிதம் - 1980.09.09

04. வசதிக் கட்டணம் மற்றும் சேவைக்கட்டணம் (57/75 1975.11.05)

05. பாடசாலையினுள் ஒழுக்கத்தை பேணல் (12/2016 - 2016.04.29) -06. பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட பண்பு ரீதியான, அளவு ரீதியினா\, கட்டமைப்பு ரீதியிலான அபிவிருத்திக்கான திட்டமிடல்கள் மற்றும் பெறுகை செயற்பாடுகள் தொடர்பான சுற்றுநிருபம். (26/2018 - 2018.06.22)

மேற்படி சுற்றறிக்கைள் தொடடபில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை வெவ்வேறாக குறிப்பிட்டு எதிர்வரும் 2022.09.12 ஆம் திகதிக்கு முன்னர் directorschoolactivities@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கும், அதன் வன் பிரதியை கல்விப் பணிப்பாளர் ( பாடசாலை செயற்பாடுகள்), இசுருபாய, பெலவத்த, பத்தரமுல்ல எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வினவப்பட்டுள்ளனர்.