2026 ​முதல் பாடசாலை பரீட்சைகளுக்கு தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது



2026 முதல் நடைபெறவுள்ள பின்வரும் பாடசாலை பரீட்சைகளுக்கு தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

  • க.பொ.த சாதாரண தர பரீட்சை
  • க.பொ.த உயர்தரப் பரீட்சை
  • பொது தகவல் தொழினுட்ப பரீட்சை

மேற்படி பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டுமெனின் தேசிய அடையாள அட்டை கட்டாயமானதாகும்

பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைத்துள்ள விசேட அறிவித்தல் கடிதத்தில் மேற்படி விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

சிங்கள மொழியில் பாடசாலை அதிபர்களுக்கு வௌியிடப்பட்டுள்ள மேற்படி கடிதத்தின் முக்கிய விடயங்கள் வருமாறு,

க.பொ.த சதாரண தர, க.பொ.த உயர்தர மற்றும் பொது தகவல் தொழினுட்ப பரீட்சைகளின்  போது , விண்ணப்பதாரிகளின்  தேசிய அடையாள அட்டை இலக்கம் இல்லாது வேறு விதங்களில் விண்ணப்பிக்கும்  போது விண்ணப்பதாரிகள் மற்றும் இலங்கை பரீட்சைத் திணைக்களம் இரு சாராருக்கும் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுகின்றன.

எனவே, 2025 க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு பாடசாலை மூலம் விண்ணப்பிப்பதற்கு முன்னர், மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டையை பெற்றுக்  கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும், அது தொடர்பாக மாணவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் மற்றும் ஒத்துழைப்புகளை வழங்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.

மற்றும் 2026 வருடம் முதல் க.பொ.த சாதாரண தர, உயர்தர மற்றும் பொதுத் தகவல் தொடர்பாடல் பரீட்சைகளுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு விண்ணப்பிப்பது கட்டாயமாக்கப்படுவதுடன், அது தொடர்பில் மாணவர்களுக்கு அறிவுறுத்துவதுடன், அதனை பெற்றுக் கொள்வதற்கான அறிவுறுத்தல்களை வழங்குமாறும் அறியத்தருகின்றேன்.

தேசிய அடையாள அட்டை பெற்றுக்  கொள்வது தொடர்பான ஆவணங்கள் மற்றும் விதிமுறைகள் தொடர்பில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் அறியத்தருகின்றேன்.

என பரீட்சை ஆணையாளர் நாயகம் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்