ஹாலிஎல வலயக்கல்விப் பணிப்பாளரை ஏசி அச்சுறுத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹாலிஎல வயலக் கல்விப்பணிப்பாரை ஏசி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிசார் தெரிவித்துள்ளதாக இன்றைய (30.06.2025) தினமின நாளிதழ் செய்தி வௌியிட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் சாய்ந்தமருதை சேர்ந்தவராவார். சந்தேக நபர் கல்முனையை பிறப்பிடமாகக் கொண்ட தனது உறவுமுறை மகளின் இடமாற்றம் தொடர்பில் வலயக்கல்விப் பணிப்பாளரினை சந்திக்க கடந்த 27 ஆம் திகதி காலை வேலையில் சென்றதாகவும், அங்கு ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது தனக்கு ஏசி தனது வேலையை இல்லாமலாக்குவேன் என்று குறித்த நபர் அச்சுறுத்தி சென்றதாகவும் வலயக் கல்விப் பணிப்பாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டிற்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாவும், விசாரணைகள் தொடர்வதாகவும் மேற்படி செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 கருத்துகள்