'

ஆங்கில ஸ்மார்ட் வகுப்பறைகைள் (கல்வி அமைச்சு)



பாடசாலைகளில் ஆங்கில அறிவை உயர்த்துவதற்காக நவீன தொழினுட்பங்களை பயன்படுத்தி ஆங்கில ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைக்கும் செயற்பாடு right to read செயற்றிட்டத்தின் கீழ் கல்வி அமைச்சினால் ஒருங்கிணைக்கப்பட்டு செயற்படுத்தப்படுகின்றது 


தரம் 3 தொடக்கம் தரம் 8 வரை பாடத்திட்டத்தின் ஆங்கில பாடத்திற்கு உரிய அச்சுப்புத்தகத்துக்கு அமைவாக தயாரிக்கப்பட்டுள்ள பாடங்கள் இணைக்கப்பட்ட இணைய மென்பொருள் மூலம் இந்த ஆங்கில ஸ்மார்ட் வகுப்பறை செயற்படும். 


இதுவரை நாடு பூராகவும் உள்ள 837 பாடசாலைகளில் 510,745 மாணவர்கள் இம்முறையினூடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளனர். வடக்கு, சபரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாணத்தில் இச் செயற்றிட்டம் செயற்படுகின்றது. 


2020 ஆம் வருடத்தில் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் ஸ்மார்ட் வகுப்பு செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தென் மாகாணத்தின் ஆரம்ப கட்டமாக எதிர்வரும் ஒரு சில மாதங்களில் காலி மாவட்டத்தில் 100 பாடசாலைகளும், இரண்டாம் கட்டமாக மேலும் 100 பாடசாலைகளுக்கும் இந்த ஆங்கில ஸ்மார்ட் வகுப்பறைகள் வழங்கப்படவுள்ளன. 


மாணவர்களுக்கு, பாட ஆசிரியரின் துணையுடன் ஸ்மார்ட் வகுப்பறையுடன் தொடர்பு கொள்ள முடிவதோடு, அதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்க, ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் அதிபர்களுக்கு பயிற்சி வழங்கும் நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.