'

பஸ் வண்டியில் பயணிப்போருக்கான விசேட பதிவு



பஸ் பயனமொன்றில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் சிங்கள சகோதரர் ஒருவரின் பதிவு இங்கு மொழிபெயர்ப்பு செய்யப்படுகின்றது.

பொதுமக்களின் அவதானத்திற்காக இங்கு பகிரப்படுகின்றது.

இது போன்ற அனுபவங்கள் ஏனையோரை பாதுகாக்கும் என்ற எண்ணத்தில்  இதனை அவர் பகிர்ந்துள்ளார்.

நான் பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த போது 70 வயது மதிக்கத்தக்க நபரொருவர் பஸ்ஸிலிருந்து இறங்குவதற்காக கதவருகே சென்றார். அவரின் பின்னால் சென்ற பெண்ணொருவர் அவரையும் தான்டி அவசரமாக முன்னால் சென்று குறித்த நிறுதத்தில் இறங்குகிறார். அவ்வாறு சென்ற சந்தர்ப்பத்தில் அப்பெண்ணின் கைப்பை தவறி கீழே விழுகிறது. அதனை அறியாமல் அப்பெண் இறங்க, குறித்த 70 வயது நபர் அதனை எடுத்து நடத்துனரிடம் கூறுகிறார், அப்பெண்மனியின் கைப்பை கீழே விழுந்து விட்டது. அவர் பஸ்ஸிலிருந்து இறங்கி விட்டார் என சொல்லும் போதே பஸ் புறப்பட ஆரம்பிக்கின்றது. நடத்துனரும் அதை பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

உடனடியாக மீள அப்பஸ் வண்டியில் ஏறிய குறித்த பெண் அந்நபரின் அருகில் சென்று அவரது கையில் இருந்த கைப்பையை காட்டி , எனது கைப்பையை திருடி விட்டீரல்லவா என கெட்ட வார்த்தைகளால் திட்டி, அதனை வாங்கி எடுத்துப் பார்க்க அதில் பணமில்லை. உடனே அந்நபரின் பையில் இருந்த அவரது பர்ஸை பறித்து இதோ எனது பர்ஸில் உள்ள பணம் என அதனை எடுத்துக் கொண்டு செல்கிறார்.

உடனே அந்நபர் நான் ஒரு ஓய்வு பெற்றவர். கிளினிக்  சென்று மருந்து வாங்கிக் கொண்டு வரும் பயணம் இது. அப்பணம் நான் ATM இல் எடுத்தது என பற்றுச்சீட்டையும் காண்பிக்கின்றார்.

எனினும் குறித்த பெண்மனி அப்பணத்தை எடுத்துக் கொண்டு குறித்த நிறுத்தத்தில் இறங்க அந்நபர் அந்நிறுத்தத்தில் இறங்கவில்லை. பயமாக இருந்திருக்கலாம்.

நான் இச்சம்பவத்தை பார்த்துக் கொண்டே இருந்தேன். இதனை அவதானித்த நடத்துனர் என்னருகில் வந்து, சேர் இச்சம்பவத்தை காணாதது போல் இருந்து விடுங்கள். இதில் தலையிட்டால் கத்திக்குத்து தான் வாங்க வேண்டும். குறித்த பெண்மனியின் குழு வொன்றும் பஸ்ஸில் இருக்கின்றது என. என்னாலும் ஒன்னும் செய்ய முடியவில்லை. நானும் பேசாமல் இருந்து விட்டேன்.

எனவே பஸ் வண்டியினுள் யாருடையாவது பர்ஸ் இனைக் கண்டால் அதனை எடுக்க முயல வேண்டாம். அவ்வாறு செய்ய முற்படும் போது அவமானத்துக்குள்ளாவதுடன், இருக்கின்ற பணமும் இல்லாது போகலாம். என்ற பதிவை அவர் பகிர்ந்துள்ளார்

குறிப்பு.

இச்சம்பவத்தில் அப்பெண்மனி இவ்வாறான திட்டமிட்ட திருட்டில் ஈடு பட்டிருக்கலாம். அல்லது அந்நபரும், அப்பெண்மனியும் ஒரு நாடகமாடி அவ்வயோதிபரின் அனுதாப நிலையை உருவாக்கி அவருக்கு பொதுமக்கள் பண உதவிகள் வழங்குவார்கள் என நாடகமாடி இருக்கலாம்.


எது எவ்வாறாயினும், பஸ் வண்டியில் பயணிப்போர் அவதானமாக செயற்படல் வேண்டும்.

මම මේ සිද්ධිය මුල ඉඳන් හොඳින් බලාගෙන හිටියේ. කොන්දොස්තර දැක්කා මම ඒක බලාගෙන හිටපු විදිහ. ඊට පස්සෙ කොන්දොස්තර මගේ ලඟට ඇව්ත් හෙමින් කියනවා..
"මහත්තයා නොදැක්කා වගේ ඉන්න. මොකද ඕකට මැදිහත් වෙන්න ගියොත් අනිවාර්යයෙන්ම දැලිපිහි පාරක් කන්න වෙනවා ඒ ගෑණිගෙ සෙට් එකක් බස් එකේ ඉන්නවා." කියල. ඉතින් මම මොනවා කරන්නද ? වැරද්ද ඇහැට පෙනි පෙනී කරබාගෙන ඉන්න උනා.
කවදාවත් බස් වලදී අනුන්ගේ මුදල් පසුම්බියක් දැකලා ඒක අරගන්න යන්න නම් එපා. එහෙම ගත්තොත් ඔබට ලැජ්ජාවට පත්වෙලා හිස් අතින් තමා ගෙදර එන්න වෙන්නෙ.
මේක පොකට් ගැසීමේ අලුත්ම ක්රමය වෙන්න ඇති කියල හිතෙනවා. පුළුවන් තරමින් මේ පිළිබඳව හැමෝම දැනුවත් කරන්න.

Source : Facebook