IQ வினாக்களும், விடைகளும் - வினாத்தாள் 01

 



போட்டிப் பரீட்சைகளுக்கு தயாராகுவதற்கான IQ வினாக்கள் மற்றும் அவற்றுக்கான விடைகள், விடைகளை கண்டறியும் முறை என்பன இலகு வடிவில் தரப்பட்டுள்ளன. வினாக்களுக்கான விடைகளை சுயமாக கண்டு பிடிக்க முயலுங்கள். அதன் பிறகு உரிய வினாவுக்குரிய விடையை சரிபார்க்கவும்

வினாப்பத்திரத்தின் PDF மற்றும் விடைகள் பதிவின் இறுதியில் வழங்கப்பட்டுள்ளன.

  1.  4, 9, 16, 25, 36, ...........  
  2. 1, 1, 2, 3, 5, 8, 13,.......... 
  3. 77, 69, 61, 53, 45.........
  4. 3, 6, 11, 18, 27..........
  5. 81, 27, 9, 3..... 
  6. 5, 11, 23, 47, 95...... 
  7. 120, 99, 80, 63, 48........ 
  8. 2, 6, 12, 20, 30......
  9. 1, 8, 27, 64, 125....
  10. 50, 48, 44, 38, 30......... 
  11. 5 புத்தகங்களின் விலை 650 எனின், 12 புத்தகங்களின் விலை 
  12. கமலின் வயது 24 ஆகும். அவனது தந்தையின் வயது அவனின் வயதில் இரண்டு மடங்கிலும் 8 அதிகமாகும். தந்தையின் வயது யாது
  13. வாகனமொன்று மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கின்றது எனின், 45 நிமிடத்தில் பயணிக்கிம் தூரம் யாது?
  14. பொருளொன்றின் விலையை 20 % இனால் அதிகரித்து விற்பனை செய்யும் போது அதன் விலை 720 எனின் , அதன் ஆரம்ப விலை யாது?
  15. A, B, C ஆகியோரிடையே 3:4:5 எனும் விகிதத்தில் 2400 ரூபா பங்கிடப்படும்  போது B இற்கு கிடைக்கும்  தொகை யாது
  16. சமஅளவு குழாய்கள் 6 இனால், ஒரு நீர் தாங்கி பூரணமாக நிரம்புவதற்கு 5 மணித்தியாலங்கள் எடுக்கின்றன. அத்தாங்கியை 3 மணித்தியாலத்தில் நிரப்புவதற்கு தேவைப்படும் குழாய்களின் எண்ணிக்கை யாது?
  17. 5 இலக்கங்களின் சராசரி 18 ஆகும். அதில் ஒரு இலக்கத்தினை அகற்றும்  போது சராசரி 16 ஆகும். அகற்றப்பட்ட இலக்கம் யாது?
  18. அமல் மற்றும் விமலிடம் உள்ள மொத்தப் பணம் 1500 ஆகும். அமலிடம் உள்ளது போன்று இரண்டு மடங்கு பணம் விமலிடம் உள்ளது. விமலிடம் உள்ள மொத்த பணம் யாது?
  19. 144 cm² பரப்புடைய சதுரத்தின் சுற்றளவு யாது?
  20. ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 350 எனின் , 8.5 லீற்றர்  பெற்றோலின் விலை யாது?
  21. வைத்தியர் : நோயாளி எனின், வழக்கறிஞர் : ...........(நீதிபதி, வழக்கு, சேவை பெறுநர், அலுவலகம்)
  22. குருவி : கூடு எனின், மனிதன் : .............( பாடசாலை, வீடு, வைத்தியசாலை, அலுவலகம்)
  23. புத்தகம் : பக்கம் எனின், பூ : ........... ( மரம், இதழ், வாசம், மகரந்தம்)
  24. புகையிரதம் : தண்டவாளம் எனின்,  மோட்டார் கார் : ....... ( விமானநிலையம், துறைமுகம், வீதி, மரம்)
  25. நாய் : குறைக்கும் என்பது போல, பூனை ........( கத்தும், சீறும், குரைக்கும், பாடும்)  
    • 21 - 25 இற்கான விடை 👉 ANSWER 


    • பின்வருவனவற்றுள் பொருத்தமற்ற சொல்லினை தெரிக
  26. அப்பிள், தோடம், திராட்சை, கோவா
  27. சிங்கம், புலி, யானை, ஓநாய்
  28. கங்கை, யமுனை, நைல், ஹிமாலயம்
  29. கதிரை, மேசை, கட்டில், சீப்பு
  30. சிவப்பு, நீலம், பெரிது, பச்சை
    • 26 - 30 இற்கான விடை 👉 ANSWER

  31. TABLE என்பது, UBCMF என குறிமுறைப்படுத்தப்படின், CHAIR என்பது எவ்வாறு குறிமுறையாக்கப்படும்?
  32. ROSE என்பது 6821 என குறிமுறைப்படுத்தப்படின், CHAIR என்பது 73456 என குறிமுறைப்படுத்தப்படின், PREACH என்பது 961473 என குறிமுறைப்படுத்தப்படின், SEARCH என்பது எவ்வாறு குறிமுறைப்படுத்தப்படும்
  33. ஒரு குறிமுறைப்படுத்தலின்  போது, go home என்பது ta na எனவும், sweet Home என்பது ja na எனவும் குறிமுறைப்படுத்தப்படின், home என்பது எவ்வாறு குறிமுறைப்படுத்தப்படும்?
  34. அனைத்து பூனைகளும் மிருகங்களாகும். அனைத்து மிருகங்களுக்கும் கால்கள் உள்ளன. அவ்வாறாயின் பின்வரும் கூற்றுகளுள் சரியானது,
    1. அனைத்து பூனைகளுக்கும் கால்கள் உண்டு
    2. சில பூனைகளுக்கு கால்கள் இல்லை
    3. அனைத்து மிருகங்களும் பூனைகளாகும்
    4. விடையளிக்க முடியாது
  35. ஒரு வரிசையில் A,B,C,D,E எனும் 5 பேர் அமர்ந்துள்ளனர். A யானவர் B யிற்கு வலது பக்கம் உள்ளார். E இருப்பது C யிற்கு இடது பக்கமும், A யிற்கு வலது பக்கமுமாகும். B,D அருகருகே அமர்ந்துள்ளனர். மத்தியில் அமர்ந்திருப்பவர் யார்?
  36. X ஆனவர்  Y இன் சகோதரர் ஆவார். Z ஆனவர் Y இன்  தாயார் ஆவார். W ஆனவர் Z இன் தந்தை ஆவார். V ஆனவர்  Z இன் கனவராவார். X ஆனவர் W இற்கு என்ன உறவு?
  37. வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் திறமையானவர்கள். ரவி திறமையானவன். இவ்விரண்டு கூற்றுக்களின் பிரகாரம் ரவி இவ்வகுப்பின் மாணவனாவான் என்பது
    1. நிச்சயமாக உண்மை
    2. நிச்சயமாக பொய்
    3. உண்மையாக இருக்கவும், இல்லாதிருக்கவும் சந்தரப்பம் உண்டு
  38. 5, 7, 11, 19, 35........,இடைவௌிக்கு வரவேண்டிய இலக்கம்
  39. நேரத்தை அளப்பது கடிகாரம் எனின், வெப்பநிலையை அளப்பது?
  40. A,  B யை விட உயரமானவர். C, D டை விட குட்டையானவர். B, D யை விட உயரமானவர். இவர்களுள் உயரமானவர் யார்?
  41. பின்வரும் சொற்களுள் வித்தியாசமான சொல் யாது
    • கண், காது, மூக்கு, மூளை, நாக்கு
  42. மோட்டார் வாகனத்தின் விலை 3 500 000 ஆகும். 15 % கழிவு வழங்கப்படின் புதிய விலை யாது?
  43. இன்று வியாழக்கிழமை எனின், 53 நாட்களுக்கு பின்னர் வரும் தினம் யாது?
  44. P,Q,R,S,T என்போர் வடக்கு திசையை நோக்கி வரிசையாக அமர்ந்துள்ளனர். P யானவர் S இற்கு இடது பக்கமாக அமர்ந்துள்ளார். R ஆனவர் S, T இற்கு இடையே உள்ளார். Q ஆனவர்இடது பக்க ஓரத்திலாகும். வலது பக்க ஓரத்தில் அமர்ந்துள்ள நபர் யார்?
  45. LIBRARY என்பது YRARBIL என எழுதப்படும் போது, STUDENT என்பது எவ்வாறு எழுதப்படும்
  46. சமீரவின் வகுப்பில் 30 மாணவர்கள் உள்ளனர். திறமை அடிப்படையில் அவரின் நிலை உயர் மட்டத்திலிருந்து 7 ஆவது ஆகும். கீழ் மட்டத்திலிருந்து அவரின் நிலையை கணிக்க
  47. 1 முதல் 100 வரை எழுதப்படும் போது 7 என்ற இலக்கம் எத்தனை தடவை பயன்படுத்தப்படும்
  48. ஒரு பொருளின் விலை 80 இலிருந்து 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது எனின். அதிகரிக்கப்பட்ட விலையின் சதவீதம் யாது?
  49. 2,5,11,23,47...... வெற்றிடத்திற்கு வரவேண்டிய இலக்கம்
  50. முக்கோணி ஒன்றின் கோணங்கள் 2: 3: 4 விகிதத்தில் இருப்பின் , சிறிய  கோணத்தின் அளவு யாது?
வினாப்பத்திரத்தின் PDF மற்றும் விடைகளை பின்வரும் இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம்

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்