'

மகாபொல புலமைபரிசு - விண்ணப்ப முடிவு திகதி நீடிக்கப்பட்டது.

மகாபொல புலமைபரிசு - விண்ணப்ப முடிவு நீடிக்கப்பட்டது.

2016/2017 பல்கலைக்கழக கல்வியாண்டில் இருந்து மகாபொல விண்ணப்பங்கள் Online  மூலமாகவே ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன. ஒன்லயின் மூலமான விண்ணப்ப முடிவு திகதி நீடிக்கப்பட்டுள்ளது. கல்வி நடவடிக்கைகளுக்காக பல்கலைக் கழகங்கள் மீள திறக்கப்படும் வரை இவ் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

பலகலைக் கழக கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும் போது , மாணவர்களின் விண்ணப்பப் பிரதி மாணவர்களுக்கு மீள வழங்கபடும். அதை நிரப்பி உரிய அலுவலகத்துக்கு மாணவர்கள் அதை சமர்பித்தல் வேண்டும்.  
தெரிவு செய்யப்பட அணைத்து மாணவர்களுக்கும் மகாபொல புலமைப் பரிசில் வழங்கப்படும். online விண்ணப்பத்தை சரியான முறையில் நிரப்பாதவர்களுக்கும் புலமைப் பரிசில் கிடைக்கபெறும்.

மேலதிக தகவல்களுக்கு பின்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்

 011-2685011 071-9900014 

செய்தியை உறுதிபடுத்த பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்


Instruction