'

வீட்டிலிருந்து வேலை செய்யும் அலுவலர்களின் சம்பளம் குறைக்கப்படமாட்டாது.

​ே
வீட்டில் இருந்து கடமை புரியும் அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட மாட்டாது என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயதுன்னை தெரிவித்துள்ளார்.

அரச இணையத்தள செய்திச் சேவைக்கு நேற்றைய தினம் (30 மே 2022)வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் எரிபொருள், போக்குவரத்தி பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களே கடமைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலானோர் வீட்டிலிருந்து தமது கடமைகளை மேற்கொள்ள அரச நிர்வாக அமைச்சினால் சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

அவர்கள் வீட்டில் இருந்து பணிகளை மேற்கொள்வதால் அவர்களின் சம்பளம் குறைக்கப்படாது என்பதையும் தெரிவித்தார்