அக்ரஹார காப்புறுதித் திட்டம்: புதிய மாற்றங்கள் - 2026


அக்ரஹார காப்புறுதித் திட்டம்: புதிய மாற்றங்கள் - 2026

தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியம், அரச உத்தியோகத்தர்களுக்கான அக்ரஹார (Agrahara) காப்புறுதித் திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய திருத்தங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்த முழுமையான விபரங்களை சுற்றறிக்கை 12/2005(X) மூலம் வெளியிட்டுள்ளது.

முக்கிய திருத்தங்கள்

👉 நடைமுறைக்கு வரும் திகதி
மேற்கூறப்பட்ட புதிய திருத்தங்கள் மற்றும் நடைமுறைகள் 2026 மார்ச் 01 முதல் நடைமுறைக்கு வருகின்றன.
👉 கட்டாயப் பதிவு
அனைத்து அரச உத்தியோகத்தர்களும் அக்ரஹார தரவுத் தொகுதியில் (Agrahara Database) பதிவு செய்வது 2026.04.01 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
👉 ஓய்வுபெறும் வயது எல்லை
தனிப்பட்ட விபத்து மற்றும் இயற்கை மரணக் காப்புறுதிப் பயன்களுக்கான அதிகப்படியான வயது எல்லை, தற்போதுள்ள '60 வயது' என்பதற்குப் பதிலாக 'கட்டாய ஓய்வு வயது' எனத் திருத்தப்பட்டுள்ளது.
👉 விண்ணப்பிக்கும் கால எல்லை
  • மருத்துவப் பற்றுச்சீட்டு: 90 நாட்கள்
  • மரண உரிமக் கோரிக்கை: 06 மாதங்கள்

மேலதிக விபரங்கள்

சுருக்கமான முக்கிய புள்ளிகள்:
  • விண்ணப்பிக்கும் கால எல்லை: பற்றுச்சீட்டுகள் அல்லது வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய திகதியிலிருந்து 90 நாட்களுக்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். பதிவுத் தபாலில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் 90 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அவை ஏற்றுக்கொள்ளப்படும்.
  • மரண உரிமக் கோரிக்கை: உறுப்பினர் மரணித்திருப்பின், அவர் இறந்த நாளிலிருந்து 06 மாதங்களுக்குள் மரண உரிம ஆவணக்கோப்பினை சமர்ப்பிக்க வேண்டும்.
  • தம்பதியினர் இருவருமே அரச ஊழியர்களாயின்: இருவருமே காப்புறுதிதாரர்களாக இருக்கும்போது, ஒரு பிள்ளைக்குரிய ஒரு வகை நன்மைக்காக தாய் அல்லது தந்தை ஆகிய இருவரில் ஒருவர் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும். வெவ்வேறு திட்டங்களில் பங்களிப்பு செய்திருந்தால், அதிக பயன் கிடைக்கும் திட்டத்தின் ஊடாக விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும்.
  • வைத்தியசாலையில் அனுமதித்திருக்கும் போது மரணம்: உறுப்பினர் மரணமடைந்தால், அவரின் மருத்துவ உரிமக் கோரிக்கையை அவரின் வாழ்க்கைத்துணைவர், பிள்ளைகள் (திருமணமானவர் எனின்) அல்லது பெற்றோர் (திருமணமாகாதவர் எனின்) ஏனையோரின் சம்மதத்துடன் பெற்றுக்கொள்ள முடியும்.

மேற்கூறிய புதிய திருத்தங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து நிபந்தனைகளும் 2005.05.18 திகதிய 12/2005 சுற்றறிக்கையின் படியே தொடரும்.

சுற்றறிக்கையைப் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள பொத்தான்களை அழுத்தவும்:
📄 Sinhala Circular 📄 தமிழ் சுற்றறிக்கை 📄 English Circular
<

கருத்துரையிடுக

0 கருத்துகள்