'

கல்விசாரா ஊழியர்களின் இடமாற்றம் - கல்வி அமைச்சு



கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட கல்விசாரா ஊழியர்களின் இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சினால் விசேட அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

  1. ED/05/67/28/03 ஆம் இலக்க 2023.01.05 ஆம் திகதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மார்ச் 01 ஆம் திகதிக்கு அமுலாகுமாறு அறிவிக்கப்பட்ட இடமாற்றங்கள் மார்ச் 15 ஆம் திகதிக்கு அமுலுக்கு வரும்.
  2. வருடாந்த இடமாற்ற மேன்முறையீடுகள் தொடர்பில் அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளரின் PSC/APL/1/AT-Non Academic /2022 ஆம் இலக்க 23.12.2022 ஆம் திகதிய கடிதத்தில் அறிவித்ததன் படி மறற்றும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத இடமாற்றங்கள் 15.03.2023 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்.
  3. தற்காலிக இணைப்பு மற்றும் இணைப்பை நீடித்தல் தொடர்பிலான விண்ணப்பங்கள் மார்ச் 15 ஆம் திகதிக்கு பின்னர் கருத்திற் கொள்ளப்படும்