'

சக மாணவியின் நிர்வாண புகைப்படங்கள் வௌியிட்ட மாணவர்கள் பிணையில் விடுதலைபெண் நண்பியின் நிர்வாண புகைப்படங்களை பிறந்த தின கொண்டாட்டத்தின் போது பகிர்ந்த குற்றத்தை ஒப்புக் கொண்ட குருநாகல் பிரதேச 6 பாடசாலை மாணவர்களுக்கு அரச கட்டணமாக 1500 ரூபாய் கட்டணம் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது.

குருநாகல பிரதேச பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இம்மாணவர்களுக்கு திரும்பவும் இது போன்ற குற்றங்களை செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுத்த நீதவான், இரண்டு வருடத்திற்கான 25 000 ருபாய் பிணையையும் சமர்ப்பிக்க கட்டளையிட்டுள்ளார்.

சக வயது மாணவியுடன் நெருங்கிய நண்பனாக இருந்த மேற்படி மாணவன், குறித்த மாணவியுடனான தொடர்பை முறிந்த நிலையில் தனது பிறந்த தின கொண்டாட்டத்தின் போது குறித்த மாணவியின் நிர்வாண புகைப்படங்களை தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளான்.

Source : Daily News 05 Aug 2023