'

கடந்த இரு வருடங்களில் 1250 விரிவுரையாளர்கள் நாட்டைவிட்டு வௌியேற்றம்இவ்வருட ஆரம்பம் தொடக்கம் தற்போது வரை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 600 க்கும் அதிகமானோர் வௌிநாடுகளுக்கு சென்றுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத் தலைவர் பேராசிரியர் பரண ஜயவர்தன தினமின பத்திரிகைக்கு கடந்த ஆகஸ்ட் 3 ஆம் திகதி தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களில் மொத்தமாக 1250 விரிவுரையாளர்க்ள பல்கலைக்கழகங்களை விட்டு வௌிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும், இதன் காரணமாக பல்கலைக்கழகங்களை நடாத்திச் செல்வது பெரும் சிரமமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

11200 விரிவுரையாளர்கள் இருக்க வேண்டிய நிலைமைகளின் கீழ், 6700 அளவிலான விரிவுரையாளர்களே கடமையிலுள்ளதாகவும், இதன் காரணமாக விசேடமாக கொழும்புக்கு வௌியே உள்ள பிரதேச பல்கலைக்கழகங்களில் பொறியில் மற்றும் மருத்துவ பீடங்களை நடாத்திச் செல்வதில் பெரும் சிரமம் இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.