42 ஆண்டுகளாக கல்வி வௌியீடுகளுக்கு ஒதுக்கப்பட்ட பணம் விரயம்.




42 ஆண்டுகளாக கல்வி வௌியீடுகளுக்கு ஒதுக்கப்பட்ட பணம் விரயமாகியுள்ளதாகவும், மீதி தொகையை அறியாது பாடநூல்களின் அச்சுப்பதிப்பு காரணமாக களஞ்சியசாலைகளில் நூல்கள் நிலம்பியுள்ளதாகவும், பார்வையாளர்கள் குறைவாக இருந்த போதிலும் கூட ஈதக்சலாவ புதிய வீடியோக்களின் தயாரிப்புப்பு பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், கணக்காய்வு அறிக்கை ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு இன்றைய தினமின நாளிதழ் செய்தி வௌியிட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் பின்வருமாறு,

கடந்த 42 வருடங்களாக கல்வி வௌியீடுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி சிக்கனமாக பயன்படுத்தப்படவில்லை

கல்வி வௌியீட்டுத் திணைக்கள செயற்பாடுகள் தொடர்பிலான மதிப்பீட்டு அறிக்கையில் மேற்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான இலவச பாடநூல் விநியோகம் மேற்படி திணைக்களத்தனால் மேற்கொள்ளப்படுகின்றது.

2021 ஆம் ஆண்டு தரம் 6,7,8,9 மாணவர்களுக்கான பகிரப்படாத மற்றும் மீள பயன்படுத்த முடியுமான 309 626 625 ரூபா பெறுமதியான நூல்கள் 3 422 642 இருந்த போதிலும் அவை கருத்திற் கொள்ளப்படாது, நூல் கொள்ளவனவு தயாரிக்கப்பட்டுள்ளது.

மேற்படி கையிறுப்பு கவனத்திற் கொள்ளப்படாது மற்றும் பாடநூல் விநியோக தாமதம் காரணமாக 2022.12.31 தினத்தன்று 5-12 வருட கால இடைப்பகுதியில் இருந்து 140 439 113 ரூபா பெறுமதியான 429 428 பாடநூல்கள் களஞ்சியசாலைகளில் தேங்கியுள்ளன.

மேலதிக நூல் கையிலுருப்பில் இருக்க வேண்டிய தொகை மற்றும் தற்போது இருக்கும் தொகையில் வித்தியாசதம் இருப்பதுடன், நூல் களஞ்சிய வசதியின்மை, நூல் விற்பனைக்கான கணினி முறைமை இன்மை போன்றனவும் கணக்காய்வு மேற்பார்வையின் போது கண்டறியப்பட்டுள்ளன.

பொதுக்கல்வி நவீனமயப்படுத்தல் திட்டத்தின் கீழ், சிறுவர் நூல் வௌியீட்டுக்கான செயலமர்வுகளுக்கஞு 1 089 546 செலவிடப்பட்ட போதிலும், வௌியீட்டுக்கு ஒரு நூலாவது தெரிவு செய்யப்படவில்லை.

ஈ தக்சலாவ செயற்றிட்டத்திற்கு 2021 ஆம் ஆண்டு 27 007 620 ரூபா ஒதுக்கப்பட்டு டிஜிடல் கல்வி வீடி யோக்கள் 551 தயாரிக்கப்பட்டதுடன், அதில் 431 வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதில் சில வீடிகே்கள் 150 க்கும் குறைவான பார்வையார்களைக் கொண்ட போதிலும் கூட , அதனை கருத்திற் கொள்ளாது மீள 2022 ஆம் ஆண்டு 25 473 288 ரூபா ஒதுக்கப்பட்டு மீள 490 வீடியோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தினமின நாளிதழ் செய்தி வௌியிட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்