2025 உயர்த பரீட்சை விண்ணப்பம்




2025 ஆம் ஆண்டிற்குரிய க.பொ.த. (உ.தர)ப் பரீட்சை 2025 நவம்பர் மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் 2025 டிசெம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நடாத்துவதற்கான ஒழுங்கமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமைய க.பொ.த. (உ.தர)ப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்குரிய விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்கள் வௌியிடப்பட்டுள்ளன.

விண்ணப்பப்படிவம் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2025.07.21 ஆகும்.

இப் பரீட்சைக்காக நிகழ்நிலை (Online) முறைமையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பப்படிவங்களைப் பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்களை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் (www.doenets.lk) அல்லது நிகழ்நிலை பரீட்சை இணையதளத்தில் (https://onlineexams.gov.lk/eic) அல்லது பரீட்சைத் திணைக்களத்தின் செல்லிடத் தொலைபேசி செயலிக்குள் ("DoE" Mobile app) நுழைவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் விண்ணப்பங்களையும் சமர்ப்பிக்க முடியும்.

இப்பரீட்சைக்கு தனிப்பட்ட பரீட்சார்த்தியாக தோற்றவுள்ளவர்களின் விண்ணப்பங்கள் 2025 ஜூன் 26 ஆம் திகதியிலிருந்து ஜூலை 21 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். சகல விண்ணப்பதாரிகளும் இவ் அறிவித்தலை முழுமையாக நன்கு வாசித்து விளங்கிக்கொண்டு மேற்படி இணையதளத்தினுள் நுழைந்து நிகழ்நிலை (Online) முறைமையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பி வைத்தல் வேண்டும். 

விண்ணப்பப்படிவத்தில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தெரிவு செய்த நகரத்தையும் பாடங்களையும் குறிப்பிடும் போது சரியாகக் குறிப்பிட வேண்டுமென்பதில் விசேட கவனஞ் செலுத்த வேண்டும். ஒரு பரீட்சார்த்திக்கு ஆகக்கூடியது பிரதான பாடங்களில் 03 பாடங்களுக்கு மட்டுமே பரீட்சைக்குத் தோற்ற இடமளிக்கப்படும். அதற்கு மேலதிகமாக அவசியமேற்படுமிடத்து பாட இலக்கம் 12 - பொதுச் சாதாரண பரீட்சைக்கும், பாட இலக்கம் 13 - பொது ஆங்கிலப் பாடத்திற்கும் விண்ணப்பிக்க முடியும். பரீட்சைக்காக விண்ணப்பிக்கும்போது இரண்டு பிரதான படிமுறைகளை பின்பற்றல் வேண்டும்.

1வது படிமுறை - 
விவரங்களை உள்ளடக்கி 'குறிப்பு இலக்கத்தை' (Reference number) பெற்றுக்கொள்ளல். உங்களது தனிப்பட்ட விவரங்களையும் பரீட்சை தொடர்பான விவரங்களையும் பாடங்கள் தொடர்பான விவரங்களையும் கட்டணம் செலுத்தும் முறை தொடர்பான விவரங்களையும் உள்ளடக்குக. நீங்கள் அஞ்சல் அலுவலகம் மூலம் கொடுப்பனவு செய்யின் குறிப்பு இலக்கம் (Reference number) ஒன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

2வது படிமுறை
பரீட்சைக் கட்டணம் செலுத்துதலும் விண்ணப்பத்தை தரவிறக்கம் (Download) செய்தலும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 'குறிப்பு இலக்கத்தை' (Reference number) அஞ்சல் அலுவலகத்தில் வழங்கி பரீட்சைக் கட்டணத்தை செலுத்திய பின்னர் உங்களுக்கு கிடைக்கப்பெறும் குறுஞ்செய்தியில் (SMS) உள்ள இணைப்பை (link) செயற்படுத்தியோ அல்லது மீண்டும் வலைத்தளத்தில் நுழைந்தோ உங்களுக்கு கிடைக்கப்பெறும் "Download AL 2025 Application" ஐத் தெரிவு செய்து (Click) உங்களது விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் (Download) செய்து கொள்ள முடியும்.

நீங்கள் வங்கி அட்டை மூலம் கட்டணம் செலுத்துவதாயின் அது சரியாக நிறைவுற்ற பின்னர் மேலேயுள்ள icon ஐ பயன்படுத்தி விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

மேலதிக தகவல்களுக்கு பின்வரும் இணைப்புகளைப் பயன்படுத்தவும்

  • பரீட்சைத் திணைக்கள Mobile App - Click Here
  • நிகழ்நிலை விண்ணப்பம் - Click Here

தமிழ் மொழிமூல அறிவித்தல் கீழே இணைக்கப்பட்டுள்ளது


கருத்துரையிடுக

0 கருத்துகள்