'

2021 வாக்காளர் இடாப்பில் பெயர் பதிவு செய்தல்


பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு மாத்திரமே வாக்குரிமை உண்டு

இவ்வருடம் கொரோனா நோய் பரவல் காரணமாக வீடுகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படமாட்டாது.
guruwaraya.lk

பொதுமக்கள் 2020 வாக்காளர் பெயர் பட்டியலில் தமது பெயர் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். அவ்வாறு பெயர் காணப்படின், தன்னியக்க முறையில் அவர்களின் பெயர் 2021 வாக்காளர் இடாப்பில் பதியப்படும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
guruwaraya.lk

தமது வதிவிடத்தில் ஏதும் மாற்றங்கள் செய்ய வேண்டி இருப்பின், அல்லது 18 வயது பூர்த்தியடைந்த ஒருவரை(ஜூன் மாதம் 1 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் ) பதிவு செய்ய வேண்டி இருப்பின், அவர்கள் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, தமது கிராம அலுவலருக்கு வழங்குதல் வேண்டும்.
guruwaraya.lk

விண்ணப்ப முடிவு 15 ஜூலை 2021

வாக்காளர் பட்டியலில் தனது பெயரை சரிபார்க்க பின்வரும் இணைப்பை அழுத்தவும்


தன்னை பதிவு செய்து கொள்ள வேண்டும் எனின் பின்வரும் விண்ணப்பத்தினை பூரணப்படுத்தவும்