'

க.பொ.த சாதாரண தர பரீட்சை 2020 - பெறுபேறு மீள்திருத்தத்துக்கு விண்ணப்பிக்கும் முறை



க.பொ.த சாதாரண தர பரீட்சை 2020 - பெறுபேறு மீள்திருத்தத்துக்கு விண்ணப்பிக்கும் முறை

மேற்படி விடயம் தொடர்பாக பரீட்சைத் திணைக்கம் வீடியோ வழிகாட்டலை வௌியிட்டுள்ளது.

விண்ணப்ப முடிவு 25 அக்டோபர் 2021

நிகழ்நிலை விண்ணப்பிக்கும் இணைப்பு

முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இதற்காக தேசிய அடையாள அட்டை மற்றும், தொலைபேசி இலக்கத்தை வழங்க வேண்டும்.
தொலைபேசிக்கு வருகின்ற இலக்கத்தினை உட்செலுத்துவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். (ஒரு முறை பதிவு செய்து கொண்டதன் பின்னர், வெறுமனே தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வைத்துக் கொண்டு பரீட்சை திணைக்களத்தின் மேற்படி விண்ணப்பங்கள் பகுதிக்கு உள்நுழையலாம்)

பின்னர் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்செலுத்தி உள்நுழைய வேண்டும். உடனே கைத்தொலைபேசிக்கு வரும் இலக்கத்தை உட்செலுத்தி உள்நுழைந்து விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு முறை தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வழங்கி உள்நுழையும் சந்தர்ப்பத்திலும், கைத்தொலைபேசிக்கு வரும் இலக்கத்தை பயன்படுத்த வேண்டும். பாஸ்வேர்ட் அவசியம் இல்லை.

  • ஒரு பாடத்திற்கு 200 ரூபா கட்டணம்
  • அதிபரின் கையொப்பம் அவசியமில்லை
  • கிரடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் அல்லது தபால் நிலையம் மூலம் கட்டணங்கள் செலுத்தலாம்.
  • ( தபால் நிலையம் மூலம் கட்டணம் செலுத்துவதாக விண்ணப்பிப்பின், விண்ணப்பித்த பின் அங்கு காட்சிப்படுத்தப்படும் குறியீட்டினை தபால் நிலையத்திற்கு வழங்கி அங்கு சென்று கட்டணம் செலுத்த வேண்டும்)
வீடியோ இணைப்பு

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.