'

பல்கலைக்கழக அனுமதி மறுக்கப்பட்ட மாணவனுக்கு 4 வருடங்களின் பின்னர் தீர்ப்பு
உயர் தொழினுட்ப கல்லூரியில் தவறுதலாக தனது பெயர் பதியப்பட்டமையினால் பல்கலைக்கழக அனுமதி மறுக்கப்பட்ட மாணவன் சார்பாக 4 வருடங்களின் பின்னர் நீதிமன்ற தீர்ப்பு கிடைத்ததாக தினமின பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

முழுமையான சம்பவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

க.பொ.த உயர்தர பரீட்சையில் 3 ஏ சித்திகளைப் பெற்றும் பல்கலைக்கழக அனுமதி மறுக்கப்பட்டு 3 வருடத்திற்கு மேலாக கல்வி மறுக்கப்பட்டதன் மூலம் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு மற்றும் அதிகாரிகள் மானவனின் அடிப்படை உரிமையை மீறீயுள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த மாணவன் எதிர்வரும் வருடத்தில் பொருத்தமான பல்கலைக்கழகத்தில் உள்ளீர்க்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை உரிமை மறுக்கப்பட்ட மாணவனின் வழக்கு செலவுக்காக 5 லட்ச ரூபாய் ஆறு மாதங்களுக்குள் வழங்கப்பட வேண்டும் எனவும் கட்டளை பிறப்பிக்கப்படடது.

2018 கலைப்பிரிவில் 3 ஏசித்திகளைப் பெற்று ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 4 ஆம் இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 99 ஆவது இடத்தையும் பெற்ற தி்ஸ்ஸமஹாராம மாணவனுக்கே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தான் யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழக சட்டத்துறைக்கு விண்ணப்பித்ததாகவும், அதை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழி நிராகரித்தாகவும் முறையீட்டாளர் குறிப்பிட்டிருந்தார்.

காலி உயர் தேசிய தொழிநுட்ப கல்லூரியில் கற்கைநெறிக்காக தான் பதிவு செய்துள்ளமையினால் பல்கலைக்கழக அனுமதி நிராகரிக்கப்பட்டதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

எனினும் குறித்த நிறுவனத்தில் கற்கைநெறி அனுமதிப் பரீட்சைக்கே தான் தோற்றியதாகவும், கற்கை நெறியை தொடர பதிவு செய்யவில்லை எனவும் குறிப்பிட்ட மாணவன் , மேற்படி விடயம் தொடர்பில் குறித்த நிறுவனத்திற்கு சென்று விசாரித்ததி்ல் தனது பெயர் தவறுதலாக உள்ளடக்கப்பட்டுள்ளமை தெரிய வர, அதை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்த போதும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தனது முன்னைய முடிவை மாற்ற முடியாததாக அதிகாரிதகள் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில் வழக்கை ஆராய்ந்த நீதிமன்றம் மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது.

தகவல் - தினமின