'

எரிபொருள் தட்டுப்பாட்டினால் நகர்ப்புற பாடசாலைகள் ஜூலை 10 வரை மூடப்படுகின்றன.நகர்ப்புற பாடசாலைகளை எதிர்வரும் ஜூலை 10 வரை மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கிராமப் புற பாடசாலைகள் போக்குவரத்து பிரச்சினைகள் இல்லாதிருப்பின் வழமை போன்று நடாத்தலாம். இது தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் பாடசாலை அதிபர் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் கூறியதாவது, அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே ஜூலை 10 வரை எரிபொருள் வழங்கப்படும். மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடைப்படலாம். குறுந்தூர போக்குவரத்துகள் இலங்கை போக்குவரத்து சபையினால் மேற்கொள்ளப்படும்