'

முகநூல் மோசடி சம்பவங்கள்



இன்றை தேசிய நாளிதழ்களில் பிரசுரமான முகநூல் மோசடி சம்பந்தப்பட்ட இரண்டு விடயங்கள் தொடர்பில் இப்பதிவு எழுதப்படுகின்றது.

முதலாது சம்பவம்

முகநூல் வாயிலாக ஆண்களையும், இளைஞர்களையும் தொடர்பு கொள்ளும் யுவதிகள் அவர்களுடன் நண்பர்களாக தொடர்பு கொண்டு, அவர்களை குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு அழைக்கின்றனர்.

குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு சென்றவுடன் அங்கிருக்கும் ஒரு குழுவினர் குறித்த ஆண்களை பயமுறுத்தி அவர்களை தாக்கி அவர்களிடம் உள்ள பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுள்ளனர். இது ஒரு குழிவினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டாவது சம்பவம்

தனது கனவன் மற்றும் ஒரு கையை இழந்த பெண் ஒருவர், முகநூல் வாயிலான தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் உதவுமாறு வேண்டுகோள் விடுக்க பலர் அவருக்கு பண உதவி செய்துள்ளனர். ஒரு நாள் நபரொருவர் தான் அப்பெண்ணுக்கு பண உதவி செய்வதாக கூறி அப்பெண்ணின் தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுள்ளார். பின்னர் குறித்த தொலைபெசி இலக்கத்துக்கு அனுப்பப்பட்டுள்ள குறுஞ்செய்தியில் உள்ள இலக்கத்தை அனுப்புமாறு கோரி பின்னர் அப்பெண்ணின் வங்கிக் கணக்கில் உள்ள 250 000 பணத்தை மோசடி செய்துள்ளார்.

எனவே இளைஞர்கள் , முகநூல் வாயிலாக கிடைக்கும் யுவதிகளின் நட்புத் தொடர்பில் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும்.

அதே போன்று முதியவர்கள் மற்றும் பெண்கள் தமது தொலைபேசி இலக்கங்களுக்கு வரும் இலக்கங்களை எவருக்கும், எச்சந்தரப்பத்திலும் வழங்கவே கூடாது.

குறிப்பாக நமது வீட்டில் இருக்கும் பெண்கள், முதியவர்கள் முக்கியமாக நிகழ்நிலை வங்கி சேவை மற்றும் நிகழ்நிலை கொடுப்பனவு வசதிகளை பயன்படுத்துவோர், ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு இது தொடர்பில் கட்டாயம் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். எச்சந்தர்ப்பத்திலும், எவருக்கும் தனது தொலைபேசி இலக்கத்திற்கு வரும் இலக்கங்களை வழங்கக் கூடாது என்பதை அவர்களிடம் தௌிவாக சொல்லி வைக்க வேண்டும்.