'

தேசிய பாடசாலை ஊழியர்களின் பிள்ளைகளை அதே பாடசாலைக்கு இணைத்துக் கொள்ளல்தேசிய பாடசாலைகளில் கடமையாற்றும் ஊழியர்களின் பிள்ளைகளை அதே தேசிய பாடசாலையில் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தேசிய பாடசாலைகளில் மூன்று வருட சேவை காலத்தை நிறைவு செய்த கல்விசார் மற்றும் கல்வி சாரா ஊழியர்களின் பிள்ளைகளை தேசிய பாடசாலைகளில் தரம் 1,5,6 மற்றும் 11 தவிர்ந்த ஏனைய வகுப்புகளுக்கு இணைத்துக் கொள்வதற்கா இவ்விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

2022 ஜனவரி 01 ஆம் திகதி மூன்று வருட சேவைகாலத்தை நிறைவு செய்த, தேசிய பாடசாலைகளில் கடமையாற்றும் ஊழியர்களின் பிள்ளைகள் தொடர்பில் எதிர்வரும் ஆகஸ்ட் 10, 2022 இற்கு முன்னர் தரவுகள் அனுப்பப்படல் வேண்டும்.

இதற்கான பிரத்தியேக சுற்றிக்கை இல்லை. இது தேசிய பாடசாலைகளில் கடமையாற்றும் கல்விசார் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கான வரப்பிரசாதமாகும். அத்துடன் குறித்த ஊழியர் கடமையாற்றும் பாடசாலைக்கான அனுமதியே வழங்கப்படும்.

மேற்படி தரவுகள் பாடசாலை அதிபரினால் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். எனவே குறித்த விடயம் தொடர்பில் தமது பாடசாலை அதிபரை தொடர்பு கொண்டு தரவுக ளை வழங்கலாம்.