'

குற்ற எச்சரிக்கை (28 மார்ச் 2023)மக்களின் விழுப்புணர்வுக்காக தினமின செய்திப் பத்திரிகையில் வௌியாகிய இரண்டு குற்றங்கள் சம்பந்தப்பட்ட பதிவுகளை பகிர்கிறோம்.

தந்தையின் நண்பனால் மகளுக்கு துன்புறுத்தல்

தனது நண்பனின் இள வயது மகளை துன்புறுத்திய 60 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் குடும்ப தகராறு காரணமாக தங்குமிடம் நாடி நண்பரின் வீட்டுக்கு வந்துள்ளார்.

மூன்று மாத காலமாக குறித்த வீட்டில் தங்கியிருந்த சந்தேக நபர் , நண்பனின் 15 வயது மகளை துன்புறுத்தியதாக மகள் தந்தையிடம் முறையிட, தந்தை பொலிசாரிடம் முறையிட்டதை தொடர்ந்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அச்செய்தி தெரிவிக்கின்றது.

மேலதிக விசாரணைகள் தொடருகின்றன.முதியோர்களின் ATM கார்டினை மோசடி செய்து 18 லட்சம் கொள்ளை

ATM மூலம் பணம் எடுக்க வரும் முதியவர்களை சூட்சுமமாக ஏமாற்றி அவர்களின் அட்டை மற்றும் கடவுச் சொல்லினை பெற்றுக் கொண்டு, பணங்களை கொள்ளையடித்த நபரொருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்த சந்தர்ப்பத்தில், அடுத்தவர்களுக்கு சொந்தமான 14 வங்கி அட்டைகளை குறித்த நபர் வைத்திருந்ததாக அச்செய்தி தெரிவிக்கின்றது.

பணம் எடுப்பதற்காக வரும் முதியவர்களுக்கு உதவுவது போன்று பாசாங்கு செய்து அவர்களின் அட்டை மற்றும் கடவுச் சொல்லினை பெற்றுக் கொண்டு குறித்த பணத்தை வழங்கியதன் பின், குறித்த அட்டைக்கு பதிலாக வேறு அட்டையை வழங்கி, அவர்கள் சென்றதன் பின்னர் அவர்களின் அட்டையில் இருந்து பணத்தை மோசடி முறையில் பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளது.

இவ்வாறு லட்சக்கணக்கான பண மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.