'

கிரைம் அப்டேட் - 03 ஏப்பிரல் 2023ஏப்பிரல் 03 ஆம் திகதி தினமின நாளிதழில் வெளியாகிய இரண்டு சம்பவங்களை படிப்பினைக்காக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

சம்பவம் 01

கதான பிரதேச 12 வயது பாடசாலை மாணவிக்கு புதிய சப்பாத்து வாங்கி தர தம்முடன் வருமாறு அழைத்த இளம் தம்பதிகளை பிரதேசவாசிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொலிஸாரின் விசாரணையின் போது, குறித்த தம்பதிகள் தாம் மட்டக்குளியை சேர்ந்தவர்கள் எனவும், குறித்த பிரதேசத்தில் வீடு ஒன்றினை அமைப்பதாகவும் அதனை அவதானிக்க வந்த சந்தர்ப்பத்தில் குறித்த மாணவியின் ஒரு பாதணியின் அடிப்பகுதி கழன்று, அவர் சிரமத்துடன் நடந்து செல்வதை கண்டு, அவரின் மீது அனுதாபம் கொண்டு புதிய பாதணிகள் வாங்கி தருவதாக அழைத்த போது,  அவர்கள் எதிர்பார்க்காத விதத்தில் குறித்த மாணவி பயந்து சத்தமிட அயலவர்கள் தம்மை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்ததாக தெரிவித்துள்ளனர்.


உண்மை நிலையை தீர விசாரித்ததன் பின்னர், அவர்களை கடுமையாக எச்சரித்த போலீசார், இள வயதினருக்கு இவ்வாறான உதவிகள் செய்யும் போது கட்டாயம் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரை தொடர்பு கொண்டு பொருத்தமான முறையில் செயற்படும் படி அறிவுறுத்தினர்

சம்பவம் 2
நான்கு வயது சிறுமின் மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டதில் குற்றவாளியாக்கப்பட்ட நபருக்கு  10 வருட கடூழிய சிறைதண்டனையும் , 250 000 ரூபாய் நஷ்டஈடும்  விதிக்கப்பட்டுள்ளது. 

2010 இல் குறித்த சிறுமியின் தந்தையை வைத்தியசாலையில் அனுமதிக்க தாயார் மற்றும் அயலவருடன் முச்சக்கர வண்டியில் வருகை தந்துள்ளனர்.

சிறுமியை வைத்தியசாலையினுள் அழைத்து செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப் பட்டதால், சிறுமியை முச்சக்கர வண்டியில் அமரச் செய்து சென்ற சந்தர்ப்பத்தில் குறித்த துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ள முச்சக்கர வண்டி ஓட்டுநர், அதனை யாரிடமும்  சொல்ல வேண்டாம் எனக் கூறி யோகர்ட் வாங்கி கொடுத்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப் பட்டிருந்தது.