'

கிரைம் அப்டேட் - 08 ஏப்பிரல் 2023படிப்பினைக்காக சில சம்பவங்களை இங்கு பகிர்கின்றோம். தினமின செய்திப் பத்திரிகையில் வௌிவந்ந இவ்விடயங்கள் உண்மையாக அல்லது திட்டமிடப்பட்ட சதியாக இருக்கலாம். என்றாலும் உங்களையும், உங்களை சூழவுள்ளவர்களையும் பாதுகாத்துக் கொள்ளவும், அவதானமாக செயற்படவும் இவ்விடயங்கள் உதவும்.


சம்பவம் 1
மாணவனின் கையில் இருந்த தொலைபேசியில்  ஆபாச வீடியோக்கள் இருந்தமை தொடர்பில் விசாரணகைள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 7 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவனுக்கு ஆபாச வீடியோக்களை பார்ப்பதற்கு கைத்தொலைபேசி வழங்கியமை தொடர்பில் ஆசிரியர் ஒருவர் விசாரிக்கப்பட்டு வருகின்றார். குறித்த பிரதேச கல்விப் பணிப்பாளரினால் மேற்படி முறைப்பாடு முன் வைக்கப்பட்டுள்ளது. மாணவனின் கையில் தொலைபேசி இருந்த சமயம் அதிபரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், விசாரணைகளுக்காக குறித்த தொலைபேசி குறித்த கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த தொலைபேசி குறித்த ஆசிரியருடையது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.


சம்பவம் 2
முன்பள்ளிகளுக்குச் சென்று அங்கு அழும் சிறுவர்களை அரவணைப்பது போல் அவர்கள் அணிந்திருந்த தங்க பஞ்சாயுதங்களை திருடிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பிரதேச முன்பள்ளிகளுக்கு செல்லும் குறித்த பெண்மனி அங்கு அழுகையுறும் சிறுவர்களை தூக்கி அரவணைப்பது போல் அவர்களின் தங்க ஆபரணங்களை திருடியுள்ளதாக அறிய வந்துள்ளது. இது வரை 8 சிறுவர்களிடம் மேற்படி திருடப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் குறித்த செய்தி தெரிவிக்கின்றது.


சம்பவம் 3
12 வயது சிறுமி தாயின் சட்டபூர்வமற்ற கனவனால் துஸ்பிரயோகப்படுத்தப்பட்டுள்ளார். 8 ஆம் தரத்தில் கல்வி கற்கும் குறித்த சிறுமியை கடந்த நான்கு வருடங்களாக துஸ்பிரயோகத்துக்குட்படுத்திய சிறுமியின் தாயின்  சட்டபூர்வமற்ற கனவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்ணை கனவன் கைவிட்டு சென்ற நிலைமையில் சந்தேக நபருடன் குறித்த பெண்மனி சட்டபூர்வமற்ற தொடர்பை பேணி வந்துள்ளார். குறித்த இருவரும் கூலித் தொழில் செய்து வரும் நிலைமையில், குறித்த சிறுமி 2019 டிசம்பர் முதல் இவ்வாறு துஸ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளார்.

தனது மகள் பாடசாலைக்கு செல்ல விரும்பாமை காரணமாக, அதனை பிரதேச கிராம அலுவலரிடம் தாய் முறையிட்டுள்ளார். குறித்த கிராம அலுவலர் பிரதேச மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு பொலிசாரிற்கு அறிவித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட வேலையைில் குறித்த சம்பவங்கள் தொடர்பில் சிறுமி தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.