'

ஓய்வு பெற்ற ஆசிரியரை அச்சுறுத்தி10 இலட்சம் கப்பம் பெற்றோர் கைது


தன்னுடனான நெருங்கிய தொடர்பை , மனைவிக்கு வௌிப்படுத்துவதாக கூறி, 10 லட்சம் கப்பம் கேட்டு, அதன் இறுதித் தொகையை எடுப்பதற்காக சென்ற பெண் ஒருவரையும், அவருடன் நெருங்கிய உறவில் இருந்த சக ஆண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்மனி தனது பிள்ளையின் மேலதிக வகுப்புக்காக ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவரின் வீட்டுக்கு தனது பிள்ளையை அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்துள்ளார். அதே சமயம் குறித்த ஓய்வு பெற்ற ஆசிரியையின் கனவனான ஓய்வு பெற்ற ஆசிரியருடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளார். 

பின்னர் குறித்த பெண்மனி ஓய்வு பெற்ற அவ்வாசிரியரிடம் பணம் கேட்டு , பணம் வழங்காத சந்தர்ப்பத்தில் தன்னுடனான குரல் பதிவுகளை அவரின் மனைவிக்கு அனுப்புவதாக அச்சுறுத்தி 10 லட்சம் பணம் கேட்டுள்ளார். அதற்கு பயந்த அவ்வாசிரியர் குறித்த தொகையின் ஒரு பகுதியை செலுத்திய நிலைமையில், பின்னர் குறித்த அச்சுறுத்தலில் இருந்து விடுபடமுடியாமையை உணர்ந்து பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

மிகுதிப் பணத்தினை வழங்குமுகமாக குறித்த பெண் அழைக்கப்பட்டு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 43 வயதுடைய மேற்படி பெண்ணும், அவளுடன் வருகை தந்த 31 வயது ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர்