விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கற்பிப்பது போற்றுதற்குரிய விடயம் என்றாலும் இது மிகவும் சவால்மிக்கதாகும். வெவ்வேறு வயது மற்றும் திறன்களை நிவர்த்தி செய்வது தனிப்பட்ட பலம் மற்றும் பலவீனங்களை அங்கீகரிப்பது, வாழ்க்கை மற்றும் சமூக திறன்களை வளர்ப்பது மற்றும் நடத்தை ரீதியான பிரச்சினைகளைக் கையாளுதல் போன்ற தினசரி சவால்களை ஆசிரியர்கள் எதிர்கொள்கின்றனர். சில மாணவர்களுக்கு எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளை அடையாளம் காண்பது, படிப்பது, எண்ணுவது அல்லது வெளிப்படுத்துவது கடினமாக உள்ளது. பல சவால்கள் இருந்தபோதிலும், அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த கல்வியை வழங்குவதில் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் உள்ளனர். அவர்கள் அனைவரும் பாடங்களில் உள்ளீர்க்கப்படுவதையும் வகுப்பறையில் வெற்றிபெறுவதையும் உறுதிசெய்ய அயராது பாடுபடுகின்றனர்.
விசேட தேவைகள் உள்ள மாணவர்களுக்கான வகுப்புகளில், ஆசிரியர்கள் கற்பித்தல் கற்றல் உதவிகளை (TLA) பயன்படுத்துகின்றனர். அனைத்தும் ஒரேமாதிரியான கற்பித்தல் கற்றல் உதவிகளை பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களின் தனிப்பட்ட நிலைகளுடன் பொருந்தக்கூடிய கற்பித்தல் கற்றல் உதவிகளைப் பயன்படுத்தி மாணவர்களை சுயாதீனமான கற்றலுக்கு ஊக்குவிப்பது பற்றி சிந்திக்க வேண்டும். மாணவர்கள் முன்கூட்டியே கற்றுக்கொள்ளவும் அவர்களின் அதிகபட்ச திறனை அடையவும் உதவும் வகையில் கற்பித்தல் கற்றல் உதவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப கட்டமைக்கப்பட்ட கற்றல் அனுபவத்தை வழங்குகின்றன. வேறு வகையில் கூறுவதாயின் மாணவர்களின் தனிப்பட்ட நி லைக ளையும், நி லைமைகளையும் கருத்திற் கொண்டு ஒவ்வொரு மாணவருக்கும் பொருத்தமான கற்பித்தல் கற்றல் உதவிகளை ஆசிரியர் தெரிவுசெய்ய வேண்டும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள கற்பித்தல் கற்றல் உதவிகள் யாவும், 'உள்ளடங்கல் கல்வி அணுகுமுறை (REACH-SS) மூலம் விசேட தேவைகள் உள்ள பிள்ளைகளுக்கான கல்வியை வலுப்படுத்தும் திட்டத்தில் ஈடுபட்டவர்களின் அறிவுத்திறனைக் கொண்டு வலுப்படுத்தும் திட்டத்தில்' ஈடுபட்டவர்களின் அறிவுத்திறனைக் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள கற்பித்தல் கற்றல் உதவிகள் யாவும், 'உள்ளடங்கல் கல்வி அணுகுமுறை (REACH-SS) மூலம் விசேட தேவைகள் உள்ள பிள்ளைகளுக்கான கல்வியை கொண்டு உருவாக்கப்பட்டவையாகும். ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் கூட்டிணைந்து கல்வியமைச்சு செயற்படுத்திய இந்தத் திட்டமானது, வகுப்பறைகளில் இந்த உதவிகளின் நடைமுறைப் பயன்பாட்டை உள்ளடக்கியது. சில கற்பித்தல் கற்றல் உதவிகள், விசேட தேவையுடையோரின் கல்விக்கான கற்பித்தல் பொருட்கள் மற்றும் முறைகளின் தரவுத்தளத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்தத் தரவுத்தளமானது சுகுபா பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஐந்து விசேட தேவையுடையோருக்கான பாடசாலைகளில் உள்ள நடைமுறைகளிலிருந்து பெறப்பட்ட, பரந்தளவிலான கற்பித்தல் கற்றல் உதவிகளை உள்ளடக்கியது.1
ஒவ்வொரு பிள்ளைக்கும் தனிப்பட்ட தேவைகள் இருப்பதால், விசேட தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான உலகளாவிய 'கட்டாய விடயங்கள்' என எதுவும் இல்லை என்பதை முன்னிலைப்படுத்துவது முக்கியம். எனவே, இங்கு வழங்கப்பட்டுள்ள யோசனைகளை ஆராய்ந்து, ஒவ்வொரு மாணவருக்கும் எது சிறந்ததென பார்ப்பதற்கு, உங்கள் சொந்த வகுப்பறை நடைமுறைகளுக்கு அவற்றை மாற்றியமைப்பதற்கு ஊக்குவிக்கப்படுகிறது!
0 கருத்துகள்