2025 சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் - ஜூன் நடுப்பகுதியில்


 

2025 (2026) ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் அடுத்த மாதம் நடுப்பகுதியில் வெளியிடப்படலாம் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க லியனகே நேற்று (24) தெரிவித்தார்.

பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும், முடிவுகளை வெளியிடுவதற்குத் தேவையான ஏனைய பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையானது கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 3,545 மத்திய நிலையங்களில் நடைபெற்றது. இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு 382,249 பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 69,214 தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் உள்ளடங்கலாக மொத்தம் 451,463 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்