'

நவீன தொலைபேசியும் மாணவர்களும்
மாணவர்களின் ஸ்மார்தொலைபேசி பாவணை தொடர்பில் பெற்றோர் ஏன் கரிசனை கொள்ள வேண்டும் என்பதற்காக இங்கு ஒரு சம்பவம் குறிப்பிடப்படுகிறது.

எவ்வளவு நன்மை இருக்கும் போது, தீமைகளையா சொல்வது?
எமது பிள்ளை மீது எமக்கு நம்பிக்கை இருக்கின்றது

என்ற மனநிலைகளில் இருந்து வெளியில் வந்து, இதனை விளங்கிக் கொண்டு படிப்பினைகள் இருப்பின் பெற்றுக் கொள்ளவும்

கொரோனா காரணமாக நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைமைகளின் காரணமாக மாணவர்களின் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகள் பாரிய அளவில் பாதிப்படைய அதனை ஈடு செய்யும் முறையாக நவீன கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளின் பக்கம் கல்வித்துறையின் பார்வை சென்றது.

அமைச்சர், கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் அனைவரினதும் பார்வை, கவனம் என்பன மாணவர்களின் கற்றல் செயற்பாடு தொடர்ச்சியாக நடைபெற வேண்டும் என்ற நோக்கில் இருந்தது.

இதற்காக பல உத்திகள் பயன்படுத்தப்பட்டன. அதில் பிரதானமாக வட்ஸ்ஸெப், வைபர், சூம், போன்ற நவீன தொடர்பாடல் மென்பொருட்கள் உதவின. என்றாலும் இவற்றை பாவிக்க ஸ்மார்ட் தொலைபேசி, கணினி போன்ற தேவை ஏற்பட, பெற்றோர்கள் கஸ்டத்துக்கு மத்தியில், அவரவர்களின் நிலைமைகளுக்கு ஏற்ப மேற்படி சாதனங்களை தமது பிள்ளைகளுக்கு கொள்வனவு செய்ததுடன், மேற்படி கருவிகள் இல்லாத, பயன்படுத்தாத ஆசிரியர்களும் தமக்கென ஸ்மார்ட் தொலைபேசி, கணினி என்பவற்றைக் கொள்வனவு செய்தனர்.

மாணவர்களின் கற்றல் - கற்பித்தல் நடவடிக்கைகள் இதனூடு நடைபெற்றாலும், இதன் மறுபக்கம் தொடர்பாக பெரிதாக கரிசனை மேற்கொள்ளப்படவில்லை. வழமையாக பெற்றோர்களின் கையில் இருக்கும் தொலைபேசி, மாணவர்களின் கையில் அதிகம் தரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டன. மாணவர்களும் ஒன்லைன் கிளாஸ் என்று சொல்லிக் கொண்டு வேறுபட்ட பல்வேறு செயற்பாடுகளை மேற்கொள்ள சந்தர்ப்பமாக இது அமைந்தது.

நமது நாட்டில் நடந்த ஒரு சம்பவம்

தனது நிர்வாண புகைப்படம் முகநூலில் பதியப்படுவதாக உயர்தரம் கற்கும் மாணவி ஒருவரின் முறைப்பாட்டுக்கு அமைய, மேற்படி பதிவை இட்ட நபர் கைது செய்யப்படுகிறார். விசாரணைகள் நடைபெறுகின்றன. குறித்த நபர் உயர்தரம் கற்கும் மாணவன். இருவர் மத்தியிலும் காதல் மலர, அதனை தொடர்ந்து செல்ல ஸ்மார்ட் தொலைபேசி உதவியுள்ளது. மாணவனின் தொலைபேசி கிட்டத்தட்ட ஒரு இலட்சத்துக்கும் அதிகமாக பெறுமதியும், மாணவியின் தொலைபேசி பெறுமதி கிட்டத்தட்ட நாற்பதாயிரம் ரூபா பெறுமதியுமாகும்.

இவர்கள் தமது நிர்வாண புகைப்படங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு செல்ல, இவர்களிடையே ஏற்பட்ட மனக்கசப்பு, விரக்தியினை தாங்கிக் கொள்ள முடியாது மாணவியினால் மாணவனின் நிர்வான புகைப்படம் முகநூலில் பதிவேற்றப்பட, ஏட்டிக்கு போட்டியாக மாணவனாலும் புகைப்படங்கள் பதிவேற்றப்பட மாணவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இருவருன் தொலைபேசிகளிலும் நூற்றுக்கணக்கான அரைநிர்வாண புகைப்படங்கள் காணப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டாலும் விசாரைணகள் நீதிமன்றத்தில் தொடர்கின்றன.

மூலம்: சிலுமின சிங்கள நாளிதழ் (11.04.2021)

இது போன்ற எத்துனையோ சம்பவங்கள் திரைமறைவில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இது தொடர்பாக ஆசிரியர்கள் விழிப்புணர்வு பெறல் வேண்டும். அதுமட்டுமில்லாது இது தொடர்பாக பெற்றோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ளல் வேண்டும்.

நிகழ்நிலை வகுப்புகள் தொடர்பாக நேர அட்டவணைகள் தொடர்பாக பெற்றோர் அறிந்து வைத்திருக்க வேண்டும். வகுப்புகள் நடைபெறும் சந்தர்ப்பங்கள், நடைபெறாத சந்தர்ப்பங்கள் பற்றிய தௌிவு இருத்தல் வேண்டும்.

தினந்தோரும் ஸ்மார் தொலைபேசியை பரீட்சிக்க வேண்டும்.

வகுப்புகள் நடைபெறாத சந்தர்ப்பங்களில் பெற்றோரின் பொறுப்பில் தொலைபேசி இருத்தல் வேண்டும்.

நிகழ்நிலை வகுப்புகள் நடைபெறும் போது பெற்றோர் பிள்ளைகளுடன் இருத்தல் வேண்டும். அல்லது குறைந்தது இடைக்கிடையாவது வந்து அவர்களின் கற்றல் செயற்பாடுகளை அவதானிக்க வேண்டும்.

பிள்ளை தொடர்பில் அதிகூடிய அவதானம் இருத்தல் வேண்டும்.

தொழினுட்ப் பாவனை பாதிப்பு தொடர்பாக தேடியறிந்து கொள்ளல் வேண்டும். அல்லது ஆசிரியர்களிடம் கலந்துரையாடி இது தொடர்பான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.

பாடசாலைகள் மூலம் பெற்றோர்களுக்கு இது தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்படல் வேண்டும்.