'

தேசிய பாடசாலையில் கடமைபுரியும் கல்விசார் ஊழியர்களின் பிள்ளைகளை அதே பாடசாலைக்கு இணைத்துக் கொள்ளல்.



தேசிய பாடசாலைகளில் 3 வருட சேவைகாலத்தை நிறைவு செய்த கல்வி சார் ஊழியர்களின் பிள்ளைகளை , அதே பாடசாலைகளில் தரம் 1,5,6, 11 தவிர்ந்த ஏனைய வகுப்புகளுக்கு இணைத்துக் கொள்வது தொடர்பாக தேசிய பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு விசேட கடிதம் ஒன்றை வௌியிட்டுள்ளது.

guruwaraya.lk

2021.01.31 ஆம் திகதி உரிய பாடசாலைகளில் 3 வருட கடமையை பூர்த்தி செய்துள்ள கல்வி சார் ஊழியர்களின் தகவல்களை (தற்போது தேசிய பாடசாலைகளில் கல்வி கற்கும் பிள்ளைகள் தவிர்ந்த) வழங்கப்பட்டுள்ள இணைப்பிற்கு ஏற்ப தயாரித்து, எதிர்வரும் 31.05.2021 ஆம் திகதிக்கு முன்னர் அதிபரின் சிபாரிசுடன் அனுப்பி வைக்கப்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

guruwaraya.lk

மேலும் இச்சந்தர்ப்பங்களை வழங்குவதற்காக சுற்றறிக்கைகள் வௌியிடப்படவில்லை. இது தேசிய பாடசாலையில் கடமைபுரியும் கல்விசார் ஊழியர்களுக்கான ஒரு வரப்பிரசாதமாகும். மற்றும் இவ்வாய்ப்பானது தான் கடமையாற்றும் தேசிய பாடசாலையில் பிள்ளையை இணைத்துக் கொள்வதற்கே வழங்கப்படும்.

guruwaraya.lk

01. 2021.01.31 ஆம் திகதிக்கு 3 வருட சேவைகாலத்ததை நிறைவு செய்த கல்விசார் ஊழியர்களின் தகவல்களை மாத்திரம் அனுப்புதல் வேண்டும். தற்போது கடமையாற்றும் பாடசாலையின் சேவையாலம் தொடர்பாக சேவை சான்றிதழ் இணைக்கப்படல் வேண்டும்.

guruwaraya.lk

தகைமைகள் பூர்த்தியாகாத, பாடசாலை அபிவிருத்தி கணக்கில் இருந்து சம்பளம் பெறும் எவரினதும் பெயர் இணைக்கப்படக் கூடாது.

மாணவர் உறுதிப்படுத்தல் தொடர்பாக இணைப்பு 2 இல் உள்ள படிவம் பூரணப்படுத்த்படல் வேண்டும்.

இணைப்பு 01 இல் வழங்கப்பட்ட பிரகாரம் excel sheet இல் தயாரித்து அதன் மென்பிரதியை director.ns@moe.gov.lk எனும் ஈ மெயில் முகவரிக்கு அனுப்புவதுடன் முதல் பிரதிகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் அனைத்தும் தேசிய பாடசாலைகள் கிளைக்கு சமர்ப்பிக்கபடல் வேண்டும். அவ்வாறு செய்யாதவர்களின் விண்ணப்பங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படமாட்டாது.

சரியான தகவல்களை வழங்குவது அதிபரின் கடமையாகும். பொய்யான மற்றும் தவறான தகவல்கள் வழங்கப்படுமிடத்து அதற்கு அதிபர் பொறுப்புகூற வேண்டும்.

சிங்கள ஆவணத்தின் மொழிபெயர்ப்பு