'

பல்கலைக்கழக விண்ணப்பம் தொடர்பாக UGC யின் அறிவித்தல் (24 மே 2021))



வீடியோவின் தமிழாக்கம்
2020/2021 கல்வியாண்டுக்கு பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பது தொடர்பில் பபல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் விசேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளார்.

விண்ணப்பங்கள் கடந்த மே 21, 2021 தொடக்கம் எதிர்வரும் ஜூன் 11, 2021 வரை நிகழ்நிலையில் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

தற்சமயத்தில் நாட்டில் உள்ள போக்குவரத்து மட்டுப்பாடுகள் மற்றும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலைமையினை கருத்திற் கொண்டு,

பாடசாலை மாணவர்களுக்கு,

பாடசாலை விடுகைப் பத்திரம் மற்றும் அதிபரின் உறுதிப்படுத்தல் சான்றிதழ் இன்றி தம்மிடம் உள்ள விடயங்கனள மாத்திரம் முன்வைத்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இதற்காக பாடசாலை செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

தனியாள் விண்ணப்பதாரிகள்,

வதிவிடச் சான்றிதழ் மற்றும் கிராம சேவகர் உறுதிப்படுத்தல் இன்றி தமது விண்ணப்பங்களை முன்வைக்கலாம்.

போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டு, அதிபர் மார் பாடசாலைக்கு சமூகமளித்த பின்னர், பல்கலைக்கழக விண்ணப்பிததலுக்கு தேவைப்படும் மேற்படி ஆவணங்களை சேகரித்து அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.