'

மாணவர்களுக்கு இணைய மற்றும் டெப் கணினி வசதிகள்

  • பிரதேச மட்டத்தில் ஈ தக்சலாவ கற்றல் நிலையங்கள் நிறுவப்படவுள்ளன.
  • குறைந்தது 10 கணினி அ ல்லது டெப் வசதிகள் காணப்படும்.
  • இணைய வசதி வழங்கப்படும் guruwaraya.lk
  • வாரத்தில் 5 நாட்கள் காலை 7.30 முதல் மாலை 3.30 வரை இயங்கும்.
  • ஒரு அதிபர், இரண்டு ஆசிரியர்கள், ஒரு பட்டதாரி பயிலுனர் மற்றும் உதவியாளல் நியமிக்கப்படுவர்.
  • மேற்பார்வை வலய மட்டத்தில் நடைபெறும்
guruwaraya.lk

மாணவர்களுக்கு இணைய வசதி மற்றும் டெப் வசதிகள் வழங்குவது தொடர்பில் இன்று விசேட ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது. இதில் கல்வி அமைச்சர் ஜீ. எல்.பீரிஸ் மற்றும் நாமல் ராஜபக்ச மற்றும் ராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த ஆகியோர் கலந்து கொண்டனர்.
guruwaraya.lk

இங்கு தெரிவிக்கப்பட்ட விடயங்கள்

ஈ தக்சலாவ இணையத்தளத்தின் மூலம் டேட்டா கட்டணமின்றி, இலவசமாக மாணவர்கள் கல்வி கற்க வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஈ தக்சலாவில் தரம் 1 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கு மும்மொழிகளிலும் சுய கற்றலுக்கான வளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 65 000 கற்றல் விடயங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மற்றும் கற்றல் முகாமைத்துவ தொகுதியாக LMS இதனை பாவித்து, ஆசிரியர்கள் தமது கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடிய வசதிகள் காணப்படுகின்றன. தினந்தோரும் இரண்டு இலட்சம் மாணவர்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர்.
guruwaraya.lk

குருகெதர தொலைகாட்சி அலைவரிசை மூலமாக,, சென்னல் ஐ மற்றும் நேத்ரா தொலைகாட்சியினூடாக மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலங்களில் நடைபெறுகின்றது.

இவை தேசிய ரீதியில் முன்னெடுக்ககப்படும் விடயங்கள் ஆகும். அதே வேளை மாகாண மட்டத்திலும், வலய மட்டத்திலும், பாடசாலை மட்டத்திலும் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகள் விசேடமான செயற்றிட்டங்களினூடு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. guruwaraya.lk

இவ்வாறாக தொலைதூர கல்வி நடவடிக்கைள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், ஏறத்தாழ 12 % ஆன மாணவர்களுக்கு அவற்றை அணுகக் கூடிய வசதிகள் இன்றி காணப்படுகின்றனர். இணைய வசதி இன்மை. அவற்றை அணுக உபகரணங்கள் இன்மை என்பன அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆகும்.

இப்பிரச்சினையை நீக்குமுகமாக , கற்றல் செயற்பாடுகளில் கஸ்டங்களை எதிர்நோக்கும் மாணவர்களின் பிரச்சினையை தீர்க்குமுகமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் மாகாண மற்றும் வலய கல்வி அதிகாரிகளுக்கு தௌிவாக விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

guruwaraya.lk


கொவிட் நிலைமைகளில் தொலைகாட்சி, இணையம், ரேடியோ போன்ற பல்வேறு வழகளில் கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெறும் இச்சந்தர்ப்பத்தில், அவற்றை அணுக முடியாத மாணவர்களுக்காக, இணைய வசதி, இணையத்தை அணுக உபகரணங்கள் இல்லாத மாணவர்களுக்காக இவ்விசேட ஏற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளது.
guruwaraya.lk

இம்மாணவர்கள் கற்பதற்கென பிரதேச மட்டத்தில் சிறுகுழுக்களாக கற்க வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளன. இது ஈ தக்சலாவ கற்றல நிலையமாகக் காணப்படும். இவற்றுக்கு பொறுப்பாக ஒரு அதிபர், இரண்டு ஆசிரியர்கள், ஒரு பட்டதாரி பயிலுனர் மற்றும் உதவியாளர் என்போர் நியமிக்கப்படுவர். ஈ தக்சலாவ இனைப் பயன்படுத்தி மாணவர்கள் கற்க வசதிகள் செய்து கொடுக்கப்படும். குறைந்தது 10 கணினிகள் அல்லது டெப் வழங்கப்படுவதுடன் இணைய வசதியும் செய்து கொடுக்கப்படும். இவை வாரத்தின் ஐந்து நாட்கள் காலை 7.30 தொடக்கம் 3.0 வரை இயங்கும். இது ஒரு பாடசாலையாகவோ, மஹிந்தோதய ஆய்வுகூடமாகவோ, நெனசலயாகவொ, மத நிலையமாகவோ அல்லது தனியார் நிறுவனங்களின் தொண்டு செயற்பாடாக கிடைத்த இடமாகவோ அமையும்.

உடனடியாக ஆரம்பிக்க வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மேற்பார்வை வலய மட்டத்தில் மேற்கொள்ளப்படும்.

இதற்கு மேலதிகமாக ஈ தக்சலாவயில் இணைக்கப்பட்ட வீடியோ மென்பொருள்கள் பயன்படுத்தப்பட்டு நேரடி கற்பித்தல் நடவடிக்கைள் மேற்கொள்ள பயிற்சி நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜூன் 25 ஆம் திகதி 25 பாடசாலைகள் LMS முறையினை பயன்படுத்தி செயற்பாடுகளை ஆரம்பிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவும் ஈ தக்சலாவ இனூடு இணைந்ததாக அமையும். ஜுலை மாதம் 25 ஆம் திகதி அளவில் இத்திட்டம் 250 பாடசாலைகளுக்கு வி்சதரிக்கப்படும்.