'

கல்வியியற் கல்லூரி ஆசிரியர் நியமனப் பட்டியல் (தேசிய மற்றும் மாகாண பாடசாலைகள்)தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கான கல்வியியற் கல்லூரி ஆசிரியர் நியமனப் பட்டியல்​ வௌியாகியுள்ளது.


நியமனத்திகதி 18 ஜனவரி 2021 ஆகும்.  தேசிய பாடசாலை பட்டியல் குறித்த பாடசாலைகளின் பெயர்களுடனும், மாகாண நியமனப் பட்டியல் மாகாண அடிப்படையிலும் வௌியிடப்பட்டுள்ளன. guruwaraya.lk

தேசிய பாடசாலை நியமனக்கடிதங்கள் குறித்த மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவற்றை உரிய பாடசாலை அதிபர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். தேசிய பாடசாலைகளுக்கு நியமனம் பெற்ற ஆசிரியர்கள் குறித்த பாடசாலைகளுக்கு விஜயம் செய்து அதிபரிடம் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு கடமையை பொறுப்பேற்க வேண்டும். மாகாண நியமணங்கள் குறித்த மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் வழங்கப்படும். மேல் மாகாணம் தொடர்பான விடயங்களை மேல் மாகாண கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.