'

சுற்றறிக்கை : பாடநெறிக்கட்டணத்தின் அரைவாசியினைப் பெற்றுக் கொள்ளல்

கல்வி அமைச்சின் 2003/08 ஆம் இலக்க சுற்றறிக்கையானது கற்கைநெறியின் அரைவாசிக் கட்டணத்தை பெற்றுக் கொள்ளல் தொடர்பாக பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

முதலாம் பந்தியானது இதற்கு முன்னால் வௌியிடப்பட்ட சுற்றறிக்கைகளை இரத்து செய்வதாக குறிப்பிடுகின்றது.

போக்குவரத்துக்கட்டணம், இணைந்த படிகளை வழங்க முடியாது என இரண்டாம் பந்தி குறிப்பிடுகின்றது

மூன்றாம் பந்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வி டிப்ளோமா, முகாமைத்துவ டிப்ளோமா போன்ற டிப்ளோமா கற்கை நெறிகளில் சித்தியடைந்த, இலங்கை ஆசிரியர் சேவை, இலங்கை அதிபர் சேவை, இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையினை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் அல்லது விரிவுரையாளர் மேற்படி பாடநெறிக்கான செலுத்திய பதிவுக்கட்டணம் மற்றும் கற்கை நெறிக்கட்டணம் என்பவற்றின் 50 % இனை பெற்றுக்கொள்ள முடியும்.

(சிங்கள சுற்றறிக்கையின் மொழிபெயர்ப்பு)