'

பல்கலைக்கழக விண்ணப்பம் தொடர்பாக இன்றைய ஊடக மாநாட்டில் தெரிவிக்கப்பட்டவை




2020 உயர்தர சித்தியடைந்த மாணவர்கள், 2021 மே மாதம் 21 ஆம் திகதி முதல் 2021 ஜூன் 11 வரை பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

அன்றைய தினமே பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் பெயர் குறிப்பிடப்படும் நூல் விற்பனை நிலையங்களில், நூல் பதிப்பகங்களில் பெற்றுக் கொள்ள முடியும்.

விசேடமாக இம்முறை 16 தேசிய பல்கலைக்கழகங்களிலும் மேற்படி மாணவர் கைந்நூலைப் பெற்றுக் கொளளலாம்.

விண்ணப்பங்களை
  • இணையம் மூலம் கட்டாயம் நிரப்பல் வேண்டும்.
  • நிரப்பிய படிவத்தின் பிரதி apply2020@ugc.ac.lk எனும் ஈ மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
  • பிரதி ஒன்று பதிவுத் தபாலில் அனுப்படலும் வேண்டும்.

இம்முறை 41755 மாணவர்கள் உள்ளீர்க்கப்படவுள்ளனர்.

விண்ணப்பங்களை நிரப்பும் போது ஏற்படும் கை தவறுகளால் மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி மறுக்கப்படும் சந்தர்ப்பங்கள் உண்டு. எனவே பின்வரும் விடயங்கள் தொடர்பில் கரிசனை செலுத்தப்படல் வேண்டும்.

1. நிகழ்நிலையில் விண்ணப்பங்களை நிரப்புவதற்கு முன்னர், கைந்நூலில் 5 ஆம் பகுதியை தவறாது நல்ல முறையில் வாசித்து விளங்கிக் கொள்வது கட்டாயமாகும். அதிலே விண்ணப்பங்கள் சம்ர்ப்பிப்பது தொடர்பாக தௌிவாக விளக்கப்பட்டுள்ளது.

2. விண்ணப்பங்களை பூரணப்படுத்த முன்னர் தமக்கான ஈமெயில் முகவரி வேலை செய்கிறதா? அதை பயன்படுத்த முடியுமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளல் வேண்டும். அத்துடன் அது உரிய மாணவருக்கு சொந்தமான ஈமெயில் முகவரியாக இருத்தல் வேண்டும்.

3. விண்ணப்பத்தில் தொலைபேசி இலக்கத்தை சரியாகவும், தௌிவாகவும் குறிப்பிடப்படல் வேண்டும்.

4. மாணவர்கள் தான் பரீட்சை எழுதிய துறையில், தான் கற்க விரும்பும் பாடநெறியை விருப்பத் தெரிவுக்கு ஏற்ப தெரிவு செய்தல் வேண்டும். இதன் போது மாணவர்கள் கடந்த கால வெட்டுப்புள்ளிகள் தொடர்பாக கவனம் செலுத்தாது, தான் கற்க விரும்பும் துறைகளை தெரிவு செய்தல் வேண்டும்.

5. நிகழ்நிலையில் நிரப்பிய பின்னர், சமர்ப்பிக்க முன்னர் வழங்கப்பட்ட தகவல்கள் சரியானதா என்பதை மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளல் வேண்டும்.

6. விண்ணப்பப்படிவங்களை அனுப்புவதற்கு முன்னர், உரிய இடத்தில் தனது கையொப்பம் வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளல் வேண்டும்.

விண்ணப்பிப்பது தொடர்பில் ஏதும் சிக்கல்கள், பிரச்சினைகள் இருப்பின் 1919 எனும் இலக்கத்துக்கு தொடர்புகளை ஏற்படுத்தி தௌிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்