'

உயர்தர தொழில்துறை பிரிவுக்கான விண்ணப்பம் 2021க.பொ.த உயர்தர தொழிற்றுறை பாடப்பிரிவுகளுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

2021 தொடக்கம் 519 பாடசாலைகளில் உயர்தர தொழிற்றுறை பிரிவு செயல்படுகின்றது. இப்பிரிவுக்கு விண்ணப்பிப்பதற்கு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடைதல், சித்தியடையாமை என்பன கருத்திற் கொள்ளப்பட மாட்டாது.

தொழிற்றுறை பிரிவின் கீழ், 12 ஆம் வகுப்பில் பாடசாலை கற்கையை நிறைவு செய்து விட்டு, 13 ஆம் தரத்தில் காணப்படும் தொழிற்றுறை பாடங்களில் ஒன்றின் கீழ் NVQ 4 மட்டத்தில் தொழிற்றுறை பயிற்சி பாடநெறியினை பூரணப்படுத்திக் கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படும்.

26 வகையான தொழிற்றுறை பாடங்கள் காணப்படுகின்றன.

விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் இறுதித்திகதி 2021.10.26

இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை போன்ற விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, நீங்கள் அனுமதி பெற வேண்டிய பாடசாலையின் அதிபருக்கு அனுப்புதல் வேண்டும். இரண்டு பிரதிகள் பூர்த்தி செய்யப்படல் வேண்டும், ஒரு பிரதியில் தற்போதைய பாடசாலை அதிபரின் உறுதிப்படுத்தல் இன்றி அனுப்புதல் வேண்டும். அடுத்த பிரதியை புதிய பாடசாலைக்கு அனுமதி பெறும் சந்தர்ப்பத்தில், முன்னைய பாடசாலை அதிபரின் உறுதிப்படுத்தலுடன் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

மேலதிக தகவல்கள்

0112 787 136 | 0112 786 746 (9Am to 4 PM)

மேலதிக தகவல்கள் பின்வரும் இணைப்பில்