'

தற்காலிக இடமாற்றத்திலுள்ள தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கான அறிவித்தல்
தற்காலிக இடமாற்றத்திலுள்ள தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சி விசேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.

தமது தற்காலிக இணைப்பு இடமாற்ற காலம் முடிவடைந்த ஆசிரியர்கள் , மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கும் போது தமது நிரந்தர கடமையாற்றும் பாடசாலைக்கு சமூகமளித்தல் வேண்டும்.

தமது தற்காலிக இணைப்பு இடமாற்றத்தை நீடிக்க விரும்பும் ஆசிரியர்கள், பாடசாலை மீள ஆரம்பித்ததன் பின்னர் தமது நிரந்தர கடமை புரியும் பாடசாலை அதிபரின் பரிந்துரையுடன் தமது விண்ணப்பத்தை ஆசிரிய இடமாற்ற கல்விப் பணிப்பாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும்