'

கல்விசாரா ஊழியர்களுக்கான கல்வி அமைச்சின் அறிவிப்புகல்வி அமைச்சின் செயலாளரினால் தேசிய பாடசாலைகள், கல்வியியற் கல்லூரிகள், ஆசிரியர் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் மத்திய நிலையங்களில் கடமைபுரியும் கல்வி சாரா ஊழியர்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.
guruwaraya.lk

தமது நிரந்தர சேவை நிலையத்திலிருந்து தற்காலிக இடமாற்றும் பெற்று பிரிதொரு சேவை நிலையத்தில் கடமையாற்றும், தற்காலிக இடமாற்ற காலம் நிறைவுற்ற அனைத்து கல்வி சாரா ஊழியர்களும், மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்கான குறிப்பிட்ட சேவை நிலையங்கள் மீள திறக்கப்படும் வரை தமது தற்காலிக இணைப்பு இடமாற்றம் நீடிக்கப்பட்டதாக கருத்திற் கொண்டு செயற்படல் வேண்டும்.
guruwaraya.lk


மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக தமது சேவை நிலையங்கள் மீள ஆரம்பிக்கும் தினத்திவ் தமது நிரந்தர சேவை நிலையத்திற்கு சமூகமளிப்பதுடன், மேலும் தமது இணைப்பை நீடிக்க விரும்பின், நிறுவனத் தலைவரினூடாக மீள தமது விண்ணப்பங்களை சிரேஸ்ட உதவிச் செயலாளர், (ஒருங்கிணைக்கப்பட்ட சேவைகள் அற்ற) இடம் முன்வைக்க வேண்டும். நிரந்தர சேவை நிறுவன தலைவரின் பரிந்துரையற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
guruwaraya.lk


மேலும் நிலவும் கோவிட் பரவலின் கீழ் , அரச சேவைகளை தொடராக மேற்கொண்டு செல்வதற்காக அரசாங்கம் தொடராக வௌியிட்ட, வௌியிடுகின்ற நிபந்தனைகளுக்கு ஏற்ப , நிறுவனத்தின் அவசியத் தேவைகளுக்காக , சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக ஊழியர்களை பணிக்கு அழைக்கும் பலம் நிறுவனத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- சிங்கள ஆவண மொழிபெயர்ப்பு-
guruwaraya.lk