'

தரம் 10 - 13 வகுப்புகள் ஆரம்பமாகின்றன

தரம் 10,11,12,13 வகுப்புகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சி தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 8 நவம்பர் 2021 ஆம் திகதி மேற்படி வகுப்புகளுக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

எதிர்வரும் நவபம்பர் 8 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளினதும் தரம் 10,11,12 மற்றும் 13 ஆம் வகுப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஏற்கனவே ஆரம்பப்பிரிவு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுகாதார பிரிவின் அனுமதி கிடைத்ததும் தரம் 6-9 வகுப்புகள் ஆரம்பிக்கப்படும். மீதமுள்ள நாட்களைக் கருத்திற் கொண்டு பாடவிதான நிறைவு மற்றும் பரீட்சைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. உயர்தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் 2022 ஆரம்பப் பகுதியில் நடாத்தி முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.