கொரோனா காரணமாக 2021 ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைளின் பாதிப்பினை ஈடு செய்யும் வகையில் தேசிய கல்வி நிறுவகமானது கல்வி அமைச்சுக்கு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த உயர்தர மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகள் அடுத்த வருடம் (2022) வரை பிற்போடப்பட்டுள்ளன. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 2022.01.22 சனிக்கிழமை நடைபெற திட்டமிடப்பட்டுள்ள அதே வேளை, உயர்தர பரீட்சை 2022. பெப்ரவரி 7 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே போன்று சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 2022.மே.23 ஆரம்பிக்கப்படவுள்ளது.
vaathiyar.lk
கொவிட் காரணமாக பாடசாலைகள் 2020 மார்ச் மாதம் மூடப்பட்டன. இடையிடையே பாடசாலைகள் திறக்கப்பட்டாலும், அவை வெற்றியளிக்கவில்லை. கொவிட் மூன்றாம் அலைக்குப் பின்னர் பாடசாலைகள் மீள திறக்கப்பட்டது ஒக்டோபர் 21 ஆம் திகதியாகும்.
vaathiyar.lk
தேசிய கல்வி நிறுவகத்தினால் கடந்த 2020 ஆம் ஆண்டு தவறவிடப்பட்ட பாடங்கள் தொடர்பிலான மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
vaathiyar.lk
தவறவிடப்பட்ட பாடவிதானம் தொடர்பிலான தரவுகள்
2020 பாடத்திட்டம்
மேல் மாகாணம் 51.55 %
ஏனைய மாகாணங்கள் 39.7 %
vaathiyar.lk
தவறவிடப்பட்ட பாடவிதானம் தொடர்பிலான தரவுகள்
2021 பாடத்திட்டம் 2021.08.31 வரை
மேல்மாகாண சிங்கள, தமிழ் பாடசாலைகள் 88.5 %
முஸ்லிம் பாடசாலைகள் 92.5 %
vaathiyar.lk
ஏனைய மாாகாணங்களில்
சிங்கள, தமிழ் பாடசாலைகள் 54.2 %
முஸ்லிம் பாடசாலைகள் 58.34 %
vaathiyar.lk
இவ்வாறு தவறவிடப்பட்ட விடயங்கள் அனைத்து வகுப்புகளிலும் ஏற்பட்டுள்ளது. எனவே தேசிய கல்வி நிறுவகமானது, மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கு செல்லும் முன்னர் தவறவிடப்பட்ட கல்விக்குரிய காலம் ஈடு செய்யப்படல் வேண்டும் எனக் குறிப்பிடுகின்றது.
vaathiyar.lk
இதற்காக 20 வாரங்களில் நிறைவு செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ள கற்றல் கையேடுகள் வௌியிடப்பட்டுள்ளன.
vaathiyar.lk
இதனடிப்படையில் பாடசாலை மூன்றாம் தவணையானது 20 வாரங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என தேசிய கல்வி நிறுவகம் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது.
vaathiyar.lk
இதனடிப்படையில் மார்ச் மாதம் இறுதி வரை மூன்றாம் தவணை தொடரப்படும் எனவும், ஏப்பிரல் மாத விடுமுறைக்குப்பின்னர் 2022 மே மாதமளவில் புதிய வருடத்துக்கான முதலாம் தவணை ஆரம்பிக்கபப்படல் வேண்டும் எனவம் அந்த யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டுக்கான கல்வித் தவணை மே மாதம் தொடக்கம் டிசம்பர் வரை எட்டு மாதங்களைக் கொண்டிருக்கும்.
vaathiyar.lk
ஒக்டோபர் 25 முதல் 2022 மார்ச் 31 வரை ஒவ்வொரு பாடங்களுக்குமான அத்தியாவசிய கற்றல் பகுதிகளை பூரணப்படுத்துவதற்காக 800 பாடவேளைகள் ஒதுக்கப்படும்.
vaathiyar.lk
தரம் 6 தொடக்கம் 9 வரை
சமயம், வரலாறு, புவியியல், குடியியல், சுகாதாரம், இரண்டாம் மொழி ஆகிவற்றுக்கு
40 பாடவேளைகள்
மொழி, கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் ஆகியவற்றுக்கு
100 பாடவேளைகள்
vaathiyar.lk
தரம் 10 - 11 இற்கு
சமயம் 40 பாடவேளைகள்
மொழி, ஆங்கிலம், 100 பாடவேளைகள்
கணிதம், விஞ்ஞானம் 120 பாடவேளைகள்
வரலாறு, தெரிவுப் பாடங்கள் ஆகியவற்றுக்கு 60 பாடவேளைகள் ஆக பாடவேளைகள் ஒதுக்கப்படும்.
vaathiyar.lk
அனைத்து பாடங்களும் 2022. மார்ச் 31 ஆம் திகதிக்கு நிறைவு செய்யப்பட்டு, புதிய வருடத்திற்கான முதலாம் தவணைக்கு அவர்களை தயார் படுத்தல் வேண்டும்.
vaathiyar.lk
20 வார அத்திவசிய கற்றல் திட்டமானது உயர்தரத்திற்குப் பொருந்தாது.
தரம் 10 ,11,12,13 வகுப்புகள் எதிர்வரும் நவம்பர் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். தரம் 6 - 9 வகுப்புகள் ஆரம்பிக்கும் தினம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை
vaathiyar.lk
0 கருத்துகள்