'

முகநூல் பெண்களுக்கான முக்கிய பதிவு



Facebook என்பது ஆண்கள் , பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் என அனைவராலும் பயன்படுத்தப்படுவது யாவரும் அறிந்ததே. பல்வேறு பட்ட நன்மைகள் நிறைந்து காணப்படுவதுடன் அதன் மூலம் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் குறைவில்லை.

ஏமாற்றப்படுவது மட்டுமன்றி, தன்மானம், சுய கௌரவம் இழக்க வேண்டிய நிலையுடன், தற்கொலை வரை கொண்டு செல்லவும் இவை ஏதுவாகின்றன என்பன அன்மைய நிகழ்வுகள் வௌிப்படுத்துகின்றன.

முகநூல் தொடர்புகள்
முகநூலில் பரிமாறும் விடயங்கள்
வீட்டிலிருந்து சம்பாரிக்கலாம் என்ற விளம்பரங்கள் தொடர்பில் மிக மிக கவனம் செலுத்தல் வேண்டும்

எனவே முகநூலினை பயன்படுத்துவோர், முக்கியமாக பெண்கள் இது தொடர்பில் கடும் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அன்மையில் நமது நாட்டில் நடைபெற்ற சம்பவம் ஒன்று இங்கு வௌியிடப்படுகின்றது. வௌிச்சத்துக்கு வராது பல அசம்பாவிதங்கள் நடக்கலாம். எனினும் இந்த நிகழ்வை அடிப்படையாக வைத்து பெண்களான நீங்கள், உங்களது சகோதரிகள், குழந்தைகள், மாணவிகள் தொடர்பில் கடுமையான எச்சரிக்கையை வழங்குவது பொருத்தமாகும்.

சிலுமின சிங்கள நாளிதழில் வௌியிடப்பட்ட செய்தி சுருக்கமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

300 க்கு மேற்பட்ட பெண்களை நிர்வாணப் படுத்திய 18 வயதுடைய இளைஞன் கைது என்ற அடிப்படையில் இச்செய்தி வௌியிடப்பட்டுள்ளது

முதலாவது சம்பவம் ஒரு ஆசிரியையுடையது. இவர் முகநூலில் ஒரு வைத்தியருடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளார். குறித்த வைத்தியர் ஏற்கனவே திருமாணமானவர். இவர்களிருவரும் முகநூலினூடு நெருங்கிய தொடர்புகளை பேணி வந்ததுடன் அந்தரங்க புகைப்படங்களையும் பகிர்ந்து வந்துள்ளனர்.

இச்சந்தர்ப்பத்தில் குறித்த ஆசிரியையின் கண்களுக்கு அழகிய ஆடைகள் என்ற முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஆடைகள் தொடர்பில் அவதானம் செல்லுகிறது. அத்துடன் அதனோடு இணைந்ததாக உயர் நாமம் கொண்ட பெண்களுக்கான உள்ளாடைகள் தொடர்பிலான முகநூல் பக்கத்தின் மூலம் ஆடைகள் கொள்வனவு செய்யும் ஆவல் ஏற்படுகின்றது.

உயர் தர நாமம் கொண்ட உள்ளாடைகள் மிகக் குறைந்த விலையில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தமையால், அவற்றை முகநூல் வாயிலாக கொள்வனவு செய்ய கோரிக்கை விடுக்க, அங்கு ஒரு நிகழ்நிலை படிவம் வழங்கப்படுகின்றது. அதனூடான குறித்த கொள்வனவுக்கான கோரிக்கை பதியப்படுகின்றது.

பின்னர் தொலைபேசிக்கு வரும் OTP இலக்கத்தை வழங்கி குறித்த கொள்வனவை உறுதிப்படுத்துமாறு வினவப்பட அது வழங்கப்படுகின்றது.

வாரங்கள், மாதங்கள் சென்றும் குறித்த ஆடைகள் கிடைக்கப் பெறவில்லை. கொடுப்பனவுகள் மேற்கொள்ளாததால், குறித்த ஆசிரியையும் அது தொடர்பில் அலட்டிக் கொள்ளவில்லலை.

என்றாலும் பின்னர் ஒரு பெண்மனியின் முகநூல் கணக்கிலிருந்து, தான் வைத்தியருக்கு அனுப்பிய தனிப்பட்ட புகைப்படமொன்று தனக்கு வந்திருப்பதையிட்டு அதிர்ச்சி அடைகிறார். பின்னர் மேற்படி நபர் இது போன்ற நிர்வாண படங்களை அனுப்புமாறு வினவ, அதை மறுத்த ஆசிரியர் தான் பணம் தருவதாக கூறியுள்ளார். பணம் வேண்டாம். இது போன்ற புகைப்படங்கள் அனுப்பவும், இல்லாவிட்டால் இது போன்று குறித்த வைத்தியருக்கு அனுப்பப்பட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட செய்திகள் போன்றவற்றின் பிரதி பகிரங்கப்படுத்தப்படுவதுடன், குறித்த வைத்தியரின் குடும்பத்துக்கும் அனுப்பப்படும் என்ன அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது.

இதனால் தனக்கும், குறித்த வைத்தியருக்கும் ஏற்படும் பிரச்சினைகளை பற்றி சிந்தித்த குறித்த ஆசிரியை அந்த நபர் கேட்டுக் கொண்ட விதத்தில், இத்துடன் குறித்த பிரச்சினை நிறைவுறும் என்ன எண்ணத்தில் புகைப்படத்தை அனுப்புகிறார். எனினும் குறித்த நபர் தொடராக இது போன்ற புகைப்படங்களை வழங்குமாறு வற்புறுத்த, தான் பிரச்சினையில் சிக்கிக் கொண்டதை உணர்ந்த ஆசிரியை சக நண்பரின் கூற்றுக்கு இணங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாட்டை பதிகின்றார்


இரண்டவது சம்பவம் ஒரு பொறியியலாளரின் மனைவி
வீட்டிலிருந்து இலகுவாக மாதாந்தம் ஒரு இலட்சம் சம்பாரிக்கலாம் என்ற கவர்ச்சிகரமான முகநூல் விளம்பரம் மீது அவதானம் செலுத்தப்படுகின்றது. அதில் வழங்கப்பட்டுள்ள படிவத்தில் தனது தகவல்கள் , கனவரின் தகவல்கள் என்பவற்றை வழங்குகிறார். சில நாட்களில் குறித்த பெண்ணுக்கு அறிவிக்கப்படுகின்றது, தற்போதைய நிலைமைகளில் மொடலிங் மாத்திரமே உள்ளது. விரும்பினால் அதில் இணையலாம் என்பதாக.

இவரும் விருப்பத்தை தெரிவிக்க அவரது புகைப்படத்தை அனுப்புமாறு வினவப்படுகின்றது. தெரிவு செய்யப்பட்டால் 14 இலட்சத்துக்கான உடன்படிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்படுகின்து.

புகைப்படத்தை அனுப்பியதன் பின்னர், சிறிது நேரத்தில் குறித்த புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு தெரிவு செய்யப்படவில்லை என செய்தி வர, அவ்வாறெனின் எவ்வகையான புகைப்படம் தேவை என குறித்த பெண்மனி வினவ, உள்ளாடைகளுடனான புகைப்படம் வினவப்படுகின்றது. 14 இலட்சத்துக்கு ஆசைப்பட்ட பெண் புகைப்படத்தை வழங்குகிறார். பின்னர் உடம்பின் மேற்பகுதியை நிர்வாணமாக அனுப்பச் சொல்ல, தனது முகத்தை மறைத்து அனுப்புகிறார்.

முகத்தையும் காட்டி புகைப்படம் அனுப்புமாறும், இல்லாவிட்டால் உடன்படிக்கை கைச்சாத்திட முடியாது எனவும் அறிவிக்கப்பட, மேற்படி செயல் மூலமான பண சம்பாதிப்பு தேவையில்லை எனக்கூறி மறுக்கிறார்.

அதன் பின்னர் குறித்த நபர் தனக்கு ஏற்கனவே அனுப்பிய புகைப்படங்களை கனவருக்கும், கனவரின் நண்பர்களுக்கும் அனுப்புவதாக அச்சுறுத்த இதற்கு முற்றுப்புள்ளியாக அப்பெண்மனி குறித்த நபர் கேட்ட விதத்தில் புகைப்படத்தை அனுப்புகிறார்.

என்றாலும் குறித்த நபர் தொடராக புகைப்படங்கள் வினவ, தான் பிரச்சினைக்குள் அகப்பட்டுள்ளதை உணர்ந்து அவரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றை பதிகின்றார்

அதன் பின்னர் குறித்த நபர் கைது செய்யப்படுகின்றார். 18 வயதுடைய பாடசாலை மாணவன். சாதாரண தரம் வரை கல்வி கற்ற பின்னர், பெறுபேறு வரும் வரை ஹோட்டல் ஒன்றில் கொத்து போடுபவராக பணி புரிந்து அதன் மூலம் தொலைபேசி கொள்வனவு செய்து அதனூடாக இச்செயலை ஆரம்பித்துள்ளார்

கொள்வனவை உறுதிப்படுத்த வரும் OTP எனக்கூறி, முகநூல் கடவுச்சொல்லை மாற்றியமைப்பதற்கான OTP தொலைபேசிக்கு வர வைத்து, அதனைப் பெற்றுக் கொண்டு, குறித்த முகநூல் கணக்கில் உள்நுழைந்து அதில் உள்ள தரவுகளை பெற்றுக் கொண்டு அச்சுறுத்தியுள்ளார்.

300 க்கு மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளார். இதில் 30 பேர் அடையாளம் காணப்பட்டு முறைப்பாடுகள் பதிவு செய்ய்ப்பட்டுள்ளன. இதில் பாடசாலை மாணவிகளும் உள்ளடக்கம். அத்துடன் இறுதியாக வௌியாகிய உயர்தர பெறுபேற்றில் வைத்தியத் துறைக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவியும் ஒருவர். பெற்றோருக்கு கஸ்டத்தை வழங்காது நிகழ்நிலை மூலம் தொழில் புரிந்து தனது கல்விச் செலவை நிவர்த்திக்க இவர் முயன்று இவ்வலையில் சிக்குண்டுள்ளார்

UMESHA D JAYARATHNA மற்றும் beautiful Frock Design முகநூல் மூலம் வஞ்சிக்கப்பட்ட நபர்கள் இருப்பின் dir.cid@police.lk என்ற ஈமெயில் மூலம் முறைப்பாடுகளை முன்வைக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வே்ணடிக் கொள்கின்றது.