'

தேசிய பாடசாலை ஆசிரியர் வெற்றிடங்கள் தகவல்கள்தேசிய பாடசாலை ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பிலான தகவல்களை இற்றைப்படுத்துமாறு கல்வி அமைச்சு வேண்டியுள்ளது.

நிகழ்நிலையில் தேசிய பாடசாலை ஆசிரியர்களின் வெற்றிடங்கள் தொடர்பிலான தகவல்கள் பேணப்பட்டு வருகின்றன. ஆசிரியர் ஒருவர் புதிதாக பாடாசாலைக்கு நியமிக்கப்படும் போது மற்றும் இடமாற்றம் பெற்று செல்லும் சந்தர்ப்பங்களில் உரிய முறையில் அத்தகவல்களை உடனுக்குடன் இற்றைப் படுத்துமாறு கல்வி அமைச்சு வேண்டுகிறது.

பட்டதாரி ஆசிரியர் நியமனம் மற்றும் கல்வியியற் கல்லூரி ஆசிரியர் நியமனங்களின்  போது மேற்படி தகவல்களை அடிப்படையாகக் கொண்டே பாடசாலைக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் கல்வி அமைச்சு அறிவிக்கின்றது.

ஆசிரியர் தரவுகளை இற்றைப்படுத்த பின்வரும் இணைப்பை அழுத்தவும்

மேலதிக தகவல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன