'

தேசிய பாடசாலை ஆசிரிய இடமாற்றம்வருடாந்த ஆசிரிய இடமாற்றம் தொடர்பான முக்கிய அறிவித்தல்

தேசிய பாடசாலை வருடாந்த இடமாற்றங்கள் 17 ஏப்பிரல் 2023அமுலுக்கு வரும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டின் அனைத்து  தேசிய பாடசாலைகளினதும் 10 வருட மற்றும் வருடாந்த ஆசிரிய இடமாற்றங்கள் தற்போது வழங்கப்பட்டுள்ள சிபாரிசுகளுக்கு அமைய, விசேட மேன்முறையீடுகள் தவிர்ந்த ஏனைய இடமாற்றங்கள் 2023.04.17 அமுலுக்கு வரும்.
க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளின் பாதிப்பு தொடர்பில் அதிபர்களால் முன்வைக்கப்படும் மேன்முறையீடுகள் தொடர்பில்  விசேட மேன்முறையீட்டு குழு மூலம் மீளாய்வு செய்யப்படும்

இதுவரை வழங்கப்பட்டுள்ள தற்காலிக இணைப்புகள் யாவும் 30.06.2023 வரை நீடிக்கப்பட்டுள்ளது. 2023.06.30 இற்கு முன்னர் இடமாற்ற கடிதங்கள் கிடைக்கப் பெறின் அதனடிப்படையில் செயற்படவும்.