'

வட்சப் மோசடி



மொடலிங் ஆசையை காரணமாக வைத்துக் கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ள மாணவனின் கைது தொடர்பில் இன்றைய நாளிதழ்கள் செய்தி வௌியிட்டுள்ளன. பெற்றோர் தம் பிள்ளைகள் தொடர்பில் கரிசனை மற்றும் அவதானத்துடன் இருப்பின் தமது பிள்ளைகளை இவ்வாறான மோசடிகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

படிப்பினைக்காக இச்செய்தி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

பிரசித்தமான மொடலிங் துறை சார்ந்த இருவரின் பெயரில் வட்சப் குழுக்களை உருவாக்கி பாடசாலை மாணவிகள் மற்றும் இளம் பெண்களின் நிர்வாண புகைப்படங்களை பெற்ற 19 வயது மாணவனை பொலிசார் கைது செய்து பிணையில் விடுவித்துள்ளனர்

போலி இலக்கத்தில், மொடலிங் துறை சார்ந்த இருவரின் பெயரில் வட்சப் குழுக்கள் இரண்டினை உருவாக்கி பாடசாலை மாணவிகள் மற்றும் இளம் பெண்களை அதில் இணையச் செய்துள்ளார். மொடலிங் சம்பந்தமான விடயங்களை அதில் அடிக்கடி பகிர்ந்து கொண்டு குழுமம் தொடர்பிலான ஒரு நம்பகத்தன்மை மற்றும் விசுசாவத்தை உருவாக்கியுள்ளார்.

பின்னர் மொடலிங் துறைக்கு புதிதாக ஆட்சேர்ப்பு நடைபெறுவதான கூறி விளம்பரப்படுத்த, குறித்த பிரசித்தமானவர்களின் பெயரில் வட்சப் குழுமம் இருப்பதை நம்பிக் கொண்டு, மொடலிங் துறையில் ஆசை வைத்த பெண்கள் மற்றும் மாணவிகள் குறித்த விளம்பரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர்

இக்குழுமம் 2021 இல் உருவாக்கப்பட்டுள்ளது.

முதலில் குறித்த விளம்பரத்துக்கு ஏற்ப விண்ணப்பித்த பெண்களிடம் அண்மையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வினவியுள்ளர். அதன் பின்னர் இது போதுமானதாக இல்லை. இருக்கமான ஆடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வினவியுள்ளார். அரை நிருவாண புகைப்படங்களையும் வினவியுள்ளார். குறித்த துறையில் இணைய அதீத ஆர்வம் கொண்ட சிலர் தமது நிர்வாண செல்பிகளையும் அனுப்பியுள்ளனர்.

இப் புகைப்படங்கள் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கிடையிலும் பரவியுள்ளதுடன், ஒரு மாணவி தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

பல மாதங்களாக பரவிய இவ்விடயம் தொடர்பில் ஒரு ஊடகவியலாளரினால் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டதன் பின்னர் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.