2025 சாதாரண தர பரீட்சை அனுமதி அட்டை

 


2025 க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் 17.02.2026 தொடக்கம் 26.02.2026 வரை நடைபெறவுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் பாடசாலை அதிபர்களுக்கும், தனிப்பட்ட மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் அவர்கள் விண்ணப்பத்தில் வழங்கிய அவர்களின் முகவரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டின் அவற்றை நிகழ்நிலையில் மேற்கொள்ள வேண்டும். அனுமதி அட்டைகளை இணையத்திலிருந்தும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பின் அவற்றினை 10.02.2026 இற்கு முன்னர் மேற்கொள்ளல் வேண்டும்.

அனுமதி அட்டையினை தரவிறக்கம் செய்யும் வசதிகள் பெப்பரவரி 05 முதல் பரீட்சைத் திணைக்களத்தினால் ஏற்படுத்தி தரப்படும்.

மேலதிக தகவல்களுக்கு பின்வரும் இணைப்பினை பயன்படுத்தவும்

அனுமதி அட்டை தரவிறக்கம் - Click Here

அனுமதி அட்டை திருத்தம் மேற்கொள்ளல் - Click Here

இது தொடர்பான பத்திரிகை அறிவித்தல் கீழே இணைக்கப்பட்டுள்ளது



கருத்துரையிடுக

0 கருத்துகள்