'

ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை - அறிவுறுத்தல்கள்

ஐந்தாம் தர புலமைபரிசில்பரீட்சை நாளை 21 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
பிள்ளைகளை நேர காலத்துடன் பரீட்சை மண்டபத்துக்கு சமூகமளித்தல் வேண்டும், காலை 9.00 மணியளவில் அவர்கள் தம் இருக்கைகளில் அமரச் செய்யப்படல் வேண்டும்.
பகுதி 1காலை 9.30 முதல் 10.15 வரை நடைபெறும். பகுதி 2 10.45 முதல் 12.00 மணி வரை நடைபெறும்.
சுட்டெண் மாணவனின் உடையின் இடது பக்கத்தில் அணிவிக்கப் பட்டிருத்தல் வேண்டும். விடையளிக்க பென்சில் அல்லது பேனை பயன்படுத்தலாம். சுட்டெண் எழுத முதலாம் மற்றும் மூன்றாம் பக்கங்களில் இடங்கள் ஒதுக்கப் பட்டிருக்கும்.
பரீட்சை நிலையத்தினுள் பெற்றோர் உட்பிரவேசிக்க முடியாது. இடைவேளையின் போதும் பெற்றார் உட்செல்ல அனுமதி வழங்கப் படமாட்டாது. அவர்களுக்கு தேவையான சிற்றுணவு மற்றும் குடிநீர் முன்னதாகவே மாணவர்களிடம் கையளிக்கபடல் வேண்டும்.
முறைப்பாடுகள் மற்றும் விசாரணைகளுக்கு
1911, 0112784208, 0112784537, 0113188350, 0113140314, commissionerdoe@gmail.com
-பரீட்சை ஆணையாளர் - தினமின பத்திரிகை -