'

க பொ.த சாதாரண தர பரீட்சை அனுமதி அட்டை திருத்தங்கள்



க. பொ. த சாதாரண தர பரீட்சை 2020 ஆனது எதிர்வரும் மார்ச் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலைமையில், பரீட்சை திணைக்களமானது, பரீட்சை அனுமதி அட்டைகளை பாடசாலைகளுக்கும், தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு, அவர்களின் விலாசத்துக்கும் அனுப்பி வைத்துள்ளது.
guruwaraya.lk

எனினும் மேற்படி அனுமதி அட்டைகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும் எனின் அது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.


மாற்றங்கள் செய்வதற்கான இறுதித்திகதி 24 பெப்ரவரி 2021.


இது தொடர்பாக அதிபர்களுக்காக தனிப்பட்ட ரீதியில் வழங்கப்பட்டுள்ள அறிவித்தலில் பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. (சிங்கள ஆவண மொழிபெயர்ப்பு. மூல ஆவணத்திற்காக சிங்களப் பிரதியைப் பார்க்கவும்) guruwaraya.lk

அறிவித்தல் கடிதம் DP/OL/2020/07


விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்துள்ள பாடங்கள் தொடர்பாக பரீட்சை நடக்கும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்ளும் முகமாக பின்வரும் விடயங்களில் அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


1. பாடசாலைக்கு அனுமதி அட்டைகள் கிடைத்தவுடன், உடனடியாக அவற்றை கணினி மயப்படுத்திய மற்றும் பரீட்சித்த ஆசிரியர்களுக்கு வழங்கி, மாணவர்கள் விண்ணப்பித்த பாடங்கள் மற்றும் மொழிமூலம் என்பன பாடசாலை பிரதியுடன் சரிபார்க்கச் செய்து அவற்றை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
guruwaraya.lk

2. பின்னர் மாணவர்களின் அனுமதி அட்டைகளை வகுப்பு பொறுப்பாசிரியர்களிடம் கையளித்து, விண்ணப்பதாரிகளின் பெயர், மொழிமூலம், விண்ணப்பித்த பாடங்கள், பாட இலக்கங்கள் சரியானதா என்பதை மீண்டும் ஒரு முறை சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொண்டு உடனடியாக அனுமதி அட்டைகள் குறித்த மாணவர்களிடம் கையளிக்கப்படல் வேண்டும். அவ்வாறு செய்யப்பட்டமையை லொக் குறிப்பில் பதிவிடல் வேண்டும்.


3. விசேடமாக பின்வரும் பாடங்கள் சரியாக உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
சமயப் பாடங்கள்
முதலாம் தெரிவு பாடங்கள்
இரண்டாம் தெரிவு பாடங்கள் guruwaraya.lk
மூன்றாம் தெரிவு பாடங்கள்

4. இம்முறை பாட திருத்தம், மொழிமூல திருத்தம், பாட சேர்ப்பு மற்றும் பெயர் திருத்தம் என்பன் நிகழ்நிலையில் மேற்கொள்ளப்படல் வேண்டும். விசேட நிலைமைகளின் கீழ் மேற்கொள்ளும் பரீட்சை நிலைய மாற்றம் தொடர்பாக மாத்திரம் பரீட்சைத் திணைக்களத்திற்கு சமூகமளிக்க வேண்டும். அது தொடர்பாக குறித்த மாணவர்களையோ அல்லது மாணவர்களின் பெற்றோரையோ அனுப்பாது பாடசாலையிலட பரீட்சை விடயங்களுக்கு பொறுப்பான ஆசிரியரை அல்லது அதிபரால் பெயர் குறிப்பிடப்படும் ஆசிரியர் சமூகமளித்தல் வேண்டும்.
guruwaraya.lk

5. 2021.02.24 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் மாற்றங்கள் செய்யப்பட பயன்படுத்தப்படும் இணைய இணைப்பானது தன்னியக்க முறையில் செயலிழக்கப்படும். எனவே அதன் பின்னர் எவ்விதமான மாற்றங்களையும் மேற்கொள்ள முடியாது. இது தொடர்பில் ஏற்படும் நிலைமைகளுக்கு பாடசாலை அதிபர்கள் பொறுப்பாவார்கள்.


6. மேற்படி விடயங்கள் தொடர்பில் பாடசாலை அதிபர்கள் தனிப்பட்ட கவனத்தை செலுத்துவதுடன் நடவடிக்கை எடுப்பார்கள் என பரீட்சை திணைக்களம் எதிர்பார்க்கின்றது.
guruwaraya.lk

7. அனுமது அட்டைகளில் மாற்றங்கள் ஏற்படுத்துவது தொடர்பில் கடைசி வரை காத்திருப்பதால் ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்தி நேரகாலத்துடன் மாணவர்களுக்கு அறிவுறுத்தி மேற்படி விடயங்கள் தொடர்பாக விசேட செயற்றிட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு வினயமாகக் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.


தொலைபேசி இலக்கம் 0112 784 208, 0112 784 537
பெக்‌ஸ் 0112 784 422




அறிவித்தல் கடிதம் DP/OL/2020/07/01
பாடசாலை மாணவர்களின் பரீட்சை சுட்டெண் மற்றும் வரவு ஆவணத்தின் பிரதி மற்றும் பரீட்சை அனுமதி அட்டைகள் என்பன அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் பெயர்கள், விண்ணப்பித்த பாடங்கள் தொடர்பாக பாடசாலை பிரதியுடன் ஒப்பிட்டு சரிபார்க்கவும்.

guruwaraya.lk
அனுமதி அட்டைகள் கிடைத்தவுடன் அவற்றை வைத்துக் கொண்டிராது விரைவில் அவற்றை மாணவர்களுக்கு கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். பாடங்கள், மொழிமூலம் தொடர்பில் மாற்றங்கள் இருப்பின் அவ்வணைத்து அனுமதி அட்டைகளும் உமது பாடசாலையினால் பரீட்சை திணைக்களத்திற்கு பெயர் குறிப்படப்பட்டு அனுப்பப்படும் பரீட்சைக்கு பொறுப்பான ஆசிரியரிடம் கையளிக்கவும். அவ்வாசிரியரினால் நிகழ்நிலையில் குறித்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும். ஒரு விண்ணப்பதாரிக்கு ஒரு முறை மாத்திரமே மாற்றம் மேற்கொள்ள முடியும். ஒருமுறை மாற்றத்திற்குள்ளாக்கி மீண்டும் மாற்றங்கள் மேற்கொள்ள முடியாது. எனவே மாற்றங்களை உறுதியாக நிச்சயித்துக் கொண்டதன் பின்னர் மாற்றங்களை மேற்கொள்ளவும். விசேட நிலைமைகளின் கீழ் பரீட்சை நிலையங்களை மாற்ற வேண்டி இருப்பின் மாத்திரம் பரீட்சைத் திணைக்களத்திற்கு சமூகமளிக்க வேண்டும். நிகழ்நிலையில் மேற்கொள்ளும் அனைத்து மாற்றங்கள் தொடர்பாகவும், குறித்த மாற்றம் தொடர்பான கடிதங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பதாரிகளிடம் கையளிக்கவும். கணினி மயப்படுத்தப்பட்ட மேற்படி மாற்றம் தொடர்பான கடிதத்தில் கையொப்பம் அவசியமில்லை.

guruwaraya.lk
பாட மற்றும் மொழிமூல மாற்றங்கள் தொடர்பில் P/OL/2020/07 கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாடசாலை விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட ரீதியில் மேற்கொள்ளும் வேண்டுகோள்கள் சம்பந்தமாக பரீட்சைத் திணைக்களம் கவனத்திற் கொள்ளாது.


பின்வரும் விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தவும்.
பரீட்சை அனுமதி அட்டைகள் வழங்கும் போது, பரீட்சை தொடர்பான சட்ட விதிமுறைகள் அறிவுறுத்தப்படல் வேண்டும். குறித்த சட்ட விதிமுறைகள் தெரியாது என்பது ஏற்றுக்க கொள்ளக்கூடிய விடயமல்ல. பரீட்சை சட்ட விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

guruwaraya.lk
பாடசாலையை இடைவிலகள் அல்லது வேறு காரணங்களுக்காக அனுமதி அட்டைகளை பெற்றுக் கொள்ள வருகை தராத மாணவர்களின் அனுமதி அட்டைகள் பாதுகாப்பாக வைத்திருத்தல் வேண்டும். மேற்படி நபர்கள் பரீட்சைக்கு முன்னர் அனுமதி அட்டைகளை பெற வருகை தருவார்கள் எனின் அவற்றை பெற்றுக் கொள்ள முறையான ஏற்பாடுகளை மேற்கொள்ளல் வேண்டும்.

guruwaraya.lk
வரவு ஆவண பிரதியில் குறிப்பிடப்பட்டுள்ள வகையில் சரியான பெயர், பரீட்சை நிலையம், சுட்டெண், விண்ணப்பித்துள்ள பாடங்கள், மொழிமூலம், பரீட்சை கால அட்டவணை என்பன அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளன. உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பாடசாலை ஆவணத்தை பரிசீலித்து, வரவு ஆவணம் மற்றும் அனுமதி அட்டைகளில் விண்ணப்பதாரிகளின் பெயர் மாற்றத்திற்குள்ளாக்கப்படல் வேண்டும் எனின் நிகழ்நிலையில் குறித்த மாற்றங்களை மேற்கொண்டு மாற்றத்துக்குள்ளான கடிதத்தை தறவிறக்கம் செய்து குறித்த விண்ணப்பதாரியிடம் கையளிக்கவும்.

guruwaraya.lk
விண்ணப்பதாரிகள் அதிபர் அல்லது பிரதி அதிபர் முன்னிலையில் கையொப்பமிட்டு தமது கையொப்பத்தை உறுதிப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.


ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களது அனுமதி அட்டைகள் வழங்கப்படல் வேண்டும். அதில் வேறு பிரிக்கும் பகுதியில் பரீட்சை சுட்டெண், மாணவர் அடையாளம், கால அட்டவணை, பாடங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அவற்றை வேறு பிரித்து வைத்திருக்கும் படி ஆலோசனை வழங்கப்படல் வேண்டும்.

guruwaraya.lk
பரீட்சை சட்டவிதிகள் தொடர்பாக விடயங்கள் அனுப்பி வைக்ப்பட்டுள்ளன. அனைத்து மாணவர்களையும் அழைத்து இவை ஒவ்வொன்று தொடர்பாகவும் மாணவர்கள் தௌிவு பெறச் செய்தல் வேண்டும். விதிமுறைகளை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை தொடர்பாக அறிவுறுத்துவதுடன், அவற்றிலீடுபடாது இருக்குமாறு வலியுறுத்திக் கூறல் வேண்டும்.

guruwaraya.lk
ஒரே மாதிரியான பெயரில் விண்ண்பதாரிகள் பாடசாலையில் இருப்பின், அவர்களுக்கு அனுமதி அட்டைகளை வழங்குவதற்கு முன்னர் அவர்களின் முழுப்பெயர், பாடங்கள், வருகை ஆவணப்பிரதியில் பரிசீலிக்கப்பட்டு உரிய நபர்களுக்கு கையளிக்கப்படல் வேண்டும். மாறுபாடுகள் காணப்படின் உடனடியாக தெரிவிக்கும் படி மாணவர்களிடம் வேண்டுவதுடன், பரீட்சை அண்மித்த சமயம் அல்லது பரீட்சை நடந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பங்களில் இது போன்ற வேண்டுகோள்கள் மேற்கொள்ளப்படல் கூடாது.

guruwaraya.lk
அனைத்து விண்ணப்பதாரிகளும் , பரீட்சைக்கு முகங்கொடுக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பரீட்சை நிலைய மேற்பார்வையாளர் திருப்தியாகும் விதத்தில் தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.


அதற்காக பின்வரும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படலாம்.
  • ஆட்களை பதிவு செய்யும் ஆணையாளரினால் வழங்கப்படும் அடையாள அட்டை அல்லது
  • செல்லுபடியாகும் கடவுச்சீட்டு
  • செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம்
  • பாடசாலை விண்ணப்பதாரர்கள் தொடர்பாக ஆட்பதிவுத்திணைக்களத்தினால் தற்காலிகமாக வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய தற்காலிக் ஆளடையாள ஆவணம்
guruwaraya.lk
மேற்படி ஆவணங்கள் முன்வைக்கப்படாத நிலைமைகளில் அதிபர் மற்றும் வலய கல்விப்பணிப்பாளரினால் உறுதிப்படுத்தப்பட்ட புகைப்படங்கள் இரண்டு பயன்படுத்தப்பட இம்முறை மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது ஏற்றுக் கொள்ளப்படுவது திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் விசாரணைக்குப்பின்னர் என்பதை கவனத்திற் கொள்ளவும்.

பரீட்சைத் திணைக்களத்தின் அனுமதி இன்றி வருகை ஆவணம் மற்றும் அனுமதி அட்டைகளில் மாற்றங்கள் மேற்கொள்ள முடியாது. தேவையான சந்தர்ப்பங்களில் விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை ஆவணங்கள் பாதுகாப்பாப பேணப்படல் வேண்டும்.
guruwaraya.lk
அனுமதி அட்டைகள் கிடைத்தவுடன் அவற்றை மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். பரீட்சை ஆரம்பமாகும் தினம் வரை தாமதிக்க வேண்டாம். ஏனெனில் மாற்றங்கள் செய்ய வேண்டி இருப்பின் அவற்றை மேற்கொள்ள முடியாது போகும்.

பாடசாலை விண்ணப்பதாரிகள் அனுமது அட்டைகளில் மாற்றங்கள் அதிபரினூடாக மாத்திரம் மேற்கொள்ளப்படல் வேண்டும். தனிப்பட்ட ரீதியில் மேற்கொள்ள முடியாது.

guruwaraya.lk

திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய இணைய இணைப்பு