'

பல்கலைக்கழக கல்லூரிகளுக்கான மாணவர் அனுமதி 2021
பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவுத்திகதி 17 செப்ரம்பர் 2021

29 வயதுக்குட்பட்ட , க.பொ.த உயர்தர பரீட்சை சித்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மூன்று வருட முழுநேரக் கற்கைநெறியாகும்

விண்ணப்பக்கட்டணமான 500 ரூபாவை உரிய பல்கலைக்கழக கல்லூரி கணக்கிலக்கத்திற்கு செலுத்திய பற்றுச்சீட்டை, விண்ணப்பப்படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பப்படிவங்கள் உரிய பல்கலைக்கழக கல்லூரிகளின் இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் மற்றும் விண்ணப்பக்கட்டண பற்றுச்சீட்டு என்பன பதிவுத் தபாலில் உரிய பல்கலைக்கழக முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பப்படல் வேண்டும். கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் கற்கை நெறி மற்றும் பல்கலைக்கழக கல்லூரியின் பெயர் என்பன குறிப்பிடப்படல் வேண்டும்.

கற்கை நெறிகள் மற்றும் அதற்கான தகைமைகளுக்காக பின்வரும் இணைப்பை அழுத்தவும்

பல்கலைக்கழக இணையத்தளங்களுக்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்