கல்விசாரா ஊழியர்களின் வருடாந்த இடமாற்றம் 2022

கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள கல்விசாரா ஊழியர்களின் வருடாந்த இடமாற்றத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு 01 நவம்பர் 2021

சிங்கள, ஆங்கில மொழிளில் சுற்றறிக்கை வௌியாகியுள்ளது.

வருடாந்த இடமாற்றங்கள் 01 மார்ச் 2022 முதல் அமுலுக்கு வரும்.

27 செப்ரம்பர் 2021 தொடக்கம் 1 மார்ச் 2022 வரை கல்விசாரா ஊழியர்களின் பரஸ்பர இடாமாற்றங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது.

நிகழ்நிலையில் விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து பூரணப்படுத்தி அனுப்பல் வேண்டும்.

நிறுவனத் தலைவரினூடாக 01 நொவம்பர் 2021 க்கு முதல் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். விண்ணப்பப்படிவம் சுற்றறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளது.

2021 வருடாந்த இடமாற்றம் அமுல்படுத்தப்படாமையால், 2021 ஆம் ஆண்டு விண்ணப்பித்தவர்கள் மீள விண்ணப்பிக்க அவசியமில்லை. அவர்களின் விண்ணப்பங்கள் 2022 ஆம் ஆண்டுக்கு கருத்திற் கொள்ளப்படும்.

2021 ஆம் ஆண்டு விண்ணப்பித்தவ்ர்களின் பட்டியல் இணையத்தில் காட்சிப்படுத்தப்படும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்