'

ஒன்லைன் கேம்ஸ் விபரீதங்கள்

ஒன்லைன் கேம்ஸ் விபரீதங்கள் 

ஒன்லைன் கேம்ஸ்

பெரும்பாலும் தரம் 9 - 13 ஆண் மாணவர்கள் ஈடுபடுகின்றனர்.

போதைப்பொருளுக்கு அடிமையாவதற்கு இணையானது. போதைப் பொருள் பாவணைக்கு அடிமையாகிய ஒருவர் எவ்வாறு இருப்பாரோ அதே மனநிலை மற்றும் செயற்பாடுகள் அவரிடத்தில் காணப்படும். போதைப் பொருளுக்கு அடிமையானவரை அதிலிருந்து விடுவிப்பது எவ்வளவு கடினமோ அதே போன்ற நிலை தான் இவர்களிடமும் காணப்படும்

கேம்ஸ்க்கு டேட்டாக்கு மட்டுமல்ல டேட்டா அல்லாது பணமும் செலவழிக்கப்படுகின்றது. பணம் வெறுமனே ரீலோட் அல்லது ரீலோட் அட்டைகள் மூலம் செலுத்தப்பட முடியும்.

ஒரு விளையாட்டில் வெவ்வேறு மட்டங்களில் விளையாடக் கூடிய வகையில் , விளையாடுவதற்கான கணக்குகள் விற்கப்படுகின்றன.

ஒன்லைன் கிளாஸ் என்று சொல்லி, அந்த நேரத்திலும் விளையாடிக் கொண்டு இருக்கின்றனர்.

பணம் செலவழித்து விளையாடுவது, தற்போது இலத்திரனியல் மற்றும் இணைய மயமாகி போன காலத்தில் இது ஓகே ன்றது பாரதூரமான விடயம்.

அவர்கள் செலவழிக்கும் பணம் எங்கிருந்து வருகின்றது. எவ்வளவு செலவழிக்கின்றனர். அவர்களை அவர்களால் கட்டுப்படுத்த முடியாமல் போகும் சந்தர்ப்பங்களில் என்ன செய்வார்கள் என்றால் அவை மிகப் பாரதூரமான விடயமாகும்.

இவ்விளையாட்டுக்கு நேரம் மற்றும் டேட்டா மாத்திரம் செலவாகுவதில்லை. வெறுமனே நம்ம பிள்ளை என்ன போதைப் பொருளா பாவிக்கின்றான் கேம்ஸ் தானே விளையாடுகிறான் என விட்டு விட வேண்டாம்.

விளைாட்டுக்கான கணக்கின் விலை
5000 முதல் 40 000 வரை (இதை வாங்காது ஆரம்ப நிலையிலுருந்து விளையாடலாம். எனினும் சிறிது காலத்தில் 30 000 கட்டியாவது அந்த லெவலை வாங்க வேண்டும் என்ற உணர்வு இவ்விளையாட்டில் தூண்டப்படுகின்றது). 

விளைாயாட்டுக்கு தேவையான சிறப்பம்சங்கள் வாங்க வேண்டுமெனில் அதற்கு பணம் செலவழிக்க வேண்டும்.

நாளொன்றுக்கு 100 தொடக்கம் 1500 வரை போன் கார்ட் மூலம் செலவழிக்கப்படுகின்றது.

இவர்கள் சிறிது சிறிதாக செலவழித்து பின்னர் எவ்வளவு செலவழிக்கின்றோம் என்ற உணர்வின்றி, கட்டுப்பாடில்லாமல் தமது பணத்தை செலவழிக்கின்றனர்.

காசுக்கு என்ன செய்கிறார்கள்.
அவர்கள் சேமித்து வைத்தது, வழமையாக அவர்கள் சேமித்து வரும் பணத்தை இதற்காக செலவிடலாம்.

அவர்கள் கடைக்கு போவும் போது வழங்கப்படும் பணம், மற்றும் சூம் பெக்கேஜ் க்காக, டேட்டா கார்ட் வாங்க என அவர்கள் பணம் செலவழிக்கலாம்.

நண்பர்களிடம் கடன் வாங்குகிறார்கள். குறித்த விளையாட்டை விளையாடும், பண வசதி உள்ள நண்பர்களிடம் பணம் கேட்டுப் பெற்றுக் கொள்கின்றனர்.

வீட்டில் உள்ள காசை தூக்கிறார்கள். சிறு தொகையாகவோ, அல்லது பெறும் தொகையாகவோ வீட்டில் அங்காங்கே வைக்கப்படும் பணங்கள் களளவாடப் படுகின்றன. குறித்த பணம் காணாமல் போனமை தொடர்பில் பிள்ளைகளை சந்தேகப்படுவது குறைவு. வீட்டுக்கு வந்த புதிய நபர் களவாடி இருக்கலாம் அல்லது மறதியாக எங்கும் வைக்கப்பட்டிருக்கலாம் என்று அநேகர் அதை விட்டுவிடுவதுண்டு. இதன் அடுத்த கட்டாமாக அவர்கள் தமது நண்பர்கள்அல்லது உறவினர்கள் வீட்டுக்கு செல்லும் போது அங்கே திருடக் கூடிய வாய்ப்புகள் உண்டு

வீட்டில் உள்ள சாமான்களை விக்கிறார்கள். பணத்தின் தேவை அதிகரிக்க தம்மிடம் இல்லாத சந்தரப்பங்களில் வீட்டில் உள்ள பழையசாமான்கள், பயன்படுத்தாமல் வெறுமனே இருக்கும் பொருட்கள், பழைய போன்கள் என்பவற்றை விற்பனை செய்கின்றனர்.

இவர்கள், அடிக்கடி போன் பாவிப்பார்கள். ஒரே போனில் இருப்பர்.  வீட்டில் பாவிக்கப்பட்ட போன் கார்ட்கள் இருக்கும். அது அவர்களின் அறையில் அல்லது வீட்டைச் சுற்றிக் காணப்படும். நண்பர்களுடன் கேம்ஸ் தொடர்பான உரையாடல்கள் இருக்கும். போனில் கேம்ஸ் இன்ஸ்டோல் பன்னி இருப்பார்கள்.
அடிக்கடி ரீலோட் செய்யப்பட்டு இருக்கும். சில நேரங்களில் ரீலோட் செய்து விட்டு அந்த தகவல் போனில் வராமல் அல்லது அதை மறைத்து அல்லது அதை அழித்து விட்டிருப்பர்.

இவையொன்றும் இல்லையெனில் திருப்தியா?
இல்லை. அவர்கள் அதை மறைத்து வைப்பதற்கான தொழினுட்பங்களை பயன்படுத்தி இருக்கலாம். பிள்ளைகள் கள்வர்கள் என்பதல்ல. எனினும் அவர்களின் அறிவிக்கேற்ப அவர்கள் தந்திரமாக செயற்பட வாய்ப்புகள் உண்டு. நாம் எப்போதும் ஒரு சந்தேகக் கண் கொண்டு அவதானிக்கும் போது, அவர்கள் தவறு செய்யும் வாய்ப்பினை குறைக்கலாம். அதல்லாது அவர்கள் மீதான மிதிமிஞ்சிய நம்பிக்கை அவர்களை வழிகேட்டில் செல்ல காரணமாக அமையும் சந்தர்ப்பம் ஏற்படலாம்.

என்ன செய்யலாம்.
கிளாஷ் நடக்கும் போது மாத்திரம் போன் வழங்கவும். அந்நேரத்திலும் அருகில் இருக்கவும். ஹெட் போன் பாவிக்காது, அவுட்ஸ்பீக்கர் போட்டுக் கொண்டு வகுப்பில் ஈடுபட வைக்கவும். அதிகமான மானவர்கள் வகுப்புகளில் லொகின் ஆவிக் கொண்டு, ஹெட்போனையும் மாட்டிக் கொண்டு, வகுப்பில் பங்கேற்பது போன்று பாசாங்கு காட்டிக் கொண்டு ஒன்லைன் கேம்ஸ் விளைாயாடிக் கொண்டு இருக்கின்றனர்.

மாணவர்கள் பாவிக்கும் சிம் அட்டை தொடர்பில் கவனம் செலுத்தவும். குறித்த சேவை வழங்குநரின் APP இனை தரவிறக்கம் செய்து கொண்டு, குறித்த சிம் அட்டைக்கு ரீலோட் பன்னும் தொகை தொடர்பில் அவதானமாக இருக்கவும்.

பிள்ளை இவ்விளையாட்டுக்கு அடிமையாகி விட்டான் என்பதை கண்டு கொண்டால் என்ன செய்வது

உளவளத்துணை ஆலோசகர் ஒருவரை அணுகவும். திடீர் அதட்டல்கள் வேறு பிரச்சினைகளை உருவாக்கலாம். மாணவர்கள் குறித்த விளையாட்டுக்கு அடிமையாகி விட்டால் அவர்களை படிப்படியாக அதிலிருந்து விடுவிக்க முயல வேண்டும். திடீரென தொலைபேசியை பறிக்கும் போது அவர்கள் விபரீதமான முடிவுகளை எடுக்கலாம்.

மிகப் பாரதூரமான விடயம். மாணவர்கள் மத்தியில் பரவிக் கொண்டு அவர்களின் எதிர்காலத்தை அழிக்கும் விடயம். முன்னெச்சரிக்கையுடன் செயற்படவும். அவர்களின் காலம், பணம், கல்வி கற்கும் காலம் என்பன வீணாக செலவழிக்கப்படுவதுடன், கற்றல் மீதான ஆர்வமும் குன்றிச் செல்கின்றது.

நாட்டில் அன்மையில் வௌிவந்த செய்திகளின் அடிப்படையில் வீட்டில் நடைபெறும் திருட்டு, மாணவர்களின் தற்கொலைக்கு காரணமாக சொல்லப்பட்டது இதுதான். ஒன்லைன் கேம்ஸ்க்கு அடிமையாக அதை திடீரென தடுக்க அல்லது நிறுத்த சொல்லும் போது அதை தாங்கிக் கொள்ள முடியாமை. வீட்டில் திருடி அது மாட்டிப்படும் சந்தர்ப்பத்தில் அதை தாங்கிக்  கொள்ள முடியாமை.

பிள்ளைகள் மீது அளவுக்கதிக நம்பிக்கையை வைத்துக் கொண்டு கண்மூடித்தனமாக இருக்காது, தற்போதைய சூழ்நிலைகளில் அவர்கள் தப்பான வழியில் செல்லாது பாதுகாக்க வேண்டுமெனில் அவர்கள் மீதான ஒரு விசேட கண்காணிப்பினை நாம் மேற்கொள்வது காலத்தின் தேவை. நாம் அவர்களை கண்காணிக்காது விட்டால் அவர்கள் வழி தவறுதவற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்கள் யாருடன் நட்பு வைத்துள்ளார்கள், எவ்வாறான விடயங்கள் தொடர்பில் கதைக்கின்றனர் போன்ற விடயங்களை நாம் அறிந்து கொள்ள முயல வேண்டும். முக்கியமான அவர்கள் Facebook, WhatsApp பாவிப்பின் அது தொடர்பிலும் அவர்களை கண்காணிக்க வேண்டும்.