'

ஆசிரியர்களின் மொடியூல் சலுகைக் காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டது


ஆசிரியர்களின் வினைத்திறன் காண் தடை தாண்டல் (மொடியூல்) நிறைவு செய்யும் விடயங்கள் பூரணப்படுத்தப்படாமையால், அவ்விடயங்களை வெற்றிகரமாக நிறைவு செய்து கொள்தவற்காக ஏற்கனவே குறிப்பிடப்பட்ட இறுதித் திகதி 2022.10.22 வரை மேலும் ஒரு வருட காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

பதவியுயர்வு பெறுவதற்கு தகுதி பெற்றுள்ள ஆசிரியர்களின் ஆசிரியர் சேவை தரமுயர்வு விடயங்களை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டியுள்ளதால் 2022.10.22 க்கு பின்னர் பதவியுயர்வுகள் பெற வேண்டியவர்கள் தமது பதவியுயர்வுகளுக்கு தேவையான மொடியூல்களை பூரணப்படுத்தல் வேண்டும்.