'

ஆசிரியர்களின் பதவியுயர்வுகளை நடைமுறைப்படுத்தல் (09.11.2021)
புதிய ஆசிரியர் சேவை பிரமாணக்குறிப்பின் படி, ஆசிரியர்களின் பதவியுயர்வுகள் சம்பந்தமான விசேட அறிவித்தல் ஒன்றினை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது.

1. 2019.10.22 வரை பதவி உயர்வு பெற வேண்டியவர்கள், மொடியூல் பூரணப்படுத்த அவசியமில்லை. அவர்கள் மொடியூல் நிறைவு செய்யாது அடுத்த வகுப்புகளுக்கு பதவி உயர்வு பெறலாம். vaathiyar.lk

2. 2019.10.23 தொடக்கம் 2022.10.22 வரை பதவியுயர்வு பெற வேண்டிய ஆசிரியர்கள், அடுத்த பதவியுயர்வுக்கு முன்னால் தமக்கு உரித்தான மொடியூல்களை நிறைவு செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளின் கீழ் பதவியுயர்வுகளைப் பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு பதவியுயர்வு பெற்றவர்கள், தான் பதவியுயர'வு பெற்ற வகுப்புக்குரிய மொடியூல் மற்றும் பதவியுயர்வுக்கு முன் பூரணப்படுத்தப்பட வேண்டிய மொடியூல் இரண்டினையும் அடுத்த பதவியுயர்வுக்கு முன் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.
vaathiyar.lk

3. எனினும் 2022.10.22 காலம் வரை வகுப்பு 1 க்கு பதவியுயர்வு பெறும் ஆசிரியர்கள், அதற்கு அப்பால் பதவியுயர்வுகள் இல்லாததால், அவர்கள் மொடியூல் செய்வதிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர். vaathiyar.lk

4. 2022.10.22 இற்கு பின்னால் பதவியுயர்வு பெறுவோர் பதவியுயர்வுக்குத் தேவையான மொடியூல் உட்பட அனைத்து தேவைகளையும் பூரணப்படுத்தல் வேண்டும். vaathiyar.lk